SINGAPORE: பணியிடப் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளை எடுக்கத் தவறிய, 500க்கும் மேற்பட்ட சிங்கை நிறுவனங்களுக்கு மனித வளத்துறை அமைச்சகம் Stop Work ஆர்டர் கொடுத்துள்ளது.
ஆகஸ்ட் 15 மற்றும் அக்டோபர் 17 க்கு இடையில் நடத்தப்பட்ட ஒன்பது வார நடவடிக்கையில், கட்டுமானம், உற்பத்தி, போக்குவரத்து மற்றும் சேமிப்பு, தங்குமிடம் மற்றும் உணவு சேவைகள் ஆகிய துறைகளில் 750 க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் ஆய்வுகள் நடத்தப்பட்டது.
இதில், மொத்தம் 558 நிறுவனங்களுக்கு மனிதவளத்துறை அமைச்சகம் Stop Order கொடுத்துள்ளது. மேலும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்த நிறுவனம் தங்களின் அனைத்து குறைகளையும் சரி செய்யும் வரை, அங்கு எந்த பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள பேஸ்புக் பதிவில், பணியிடத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளை அமல்படுத்தாத நிறுவனங்களுக்கு எதிராக மொத்தமாக 1,828 நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதேபோல் மொத்தமாக $499,150 டாலர்கள் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, பணியிட பாதுகாப்பு குறித்து பேசியிருந்த அமைச்சர் டான் சீ லெங், “சிங்கப்பூரில் உள்ள எந்த நிறுவனமாக இருந்தாலும், அதன் பணியிட பாதுகாப்பு மாற்று சுகாதார நெறிமுறைகளை சரியாக கையாள்வது போன்ற அனைத்திற்கும் அதன் நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும். இந்த விதி வரும் அக்டோபர் முதல் அமலுக்கு வருகிறது. இந்த விதிமுறைகளை, கோட்பாடுகளை மீறும் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் இயக்குநர்களுக்கு தண்டனை வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும்” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.