TamilSaaga

சிங்கப்பூரில் வசிக்கும் தமிழர்களே… எம்ஆர்டி செலவை எளிதாக குறைக்க.. இதை மட்டும் ஃபாலோ பண்ணுங்க

சிங்கப்பூர் எம்ஆர்டியில் எப்படி எளிமையாக பணத்தை சேமிப்பது என்பது குறித்த சில ஆலோசனைகள் இங்கே.. நிச்சயம் இது உங்களுக்கு பயனுள்ளதாக அமையலாம்.

உலகின் காஸ்டலியான நகரங்களில் சிங்கப்பூர் எப்போதும் நம்பர்.1 என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. குறிப்பாக, எம்ஆர்டி செலவு மக்களின் செலவினத்தை இன்னும் அதிகரிக்கிறது.

விலை குறைந்த கார்டுகள்

எம்ஆர்டியில் ஒவ்வொரு பிரிவினருக்கும் என தனித்தனியாக கார்டு வழங்கப்படுகிறது. மாணவர்களுக்கான ஸ்மார்ட் கார்டு என்றால், 50 சதவிகிதம் குறைவாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதேபோல், சீனியர் சிட்டிசன் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என்றால் மாத பாஸ் கட்டணம் பாதி விலையில் கிடைக்கும். இதில், நீங்கள் ஏதாவது ஒரு பிரிவில் வந்தால், பொதுவான கார்டு கட்டணத்தை விட, உங்களது செலவு பாதியாக குறையும்.

மற்ற நபர்களுக்கான மாத பாஸ் கட்டணம் 128 டாலர். இதன் விலை மிகவும் அதிகம். அதிகமாக எம்ஆர்டியில் அடிக்கடி பயணிப்பவர்களுக்கு மட்டுமே இந்த கார்டு பயனுள்ளதாக இருக்கும். மற்றவர்கள் ரெகுலராக ரீசார்ஜ் செய்து பயணிப்பதே சிறந்தது. ஏனெனில், இவ்வளவு விலை கொடுத்து வாங்கி, அடிக்கடி பயணிக்கவில்லை எனில் பணம் வேஸ்ட். இதில், நீங்கள் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் என்னவெனில், நீங்கள் ஸ்டேஷனுக்குள் சென்றுவிட்டு பயணிக்காமல் மீண்டும் திரும்பி வந்தாலும் உங்கள் கார்டிலிருந்து பணம் டெபிட் ஆகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

பீக் டைம்

எம்ஆர்டி போக்குவரத்தை பொறுத்தவரை காலை 7.45க்கு முன்பு பீக் டைம் இல்லாத நேரமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. அந்த நேரத்தில் பயணிப்பவர்களுக்கு 50 சதவிகிதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த பயணத்தில் 50 சென்டிற்கும் குறைவான விலையில் பயணித்தால், அந்த பணம் உங்கள் கார்டில் இருந்து எடுக்கப்படாது. அது இலவச பயணமாக கருதப்படும். அதிகாலையிலும் மக்கள் எம்ஆர்டியை பயன்படுத்த வைக்கும் நோக்கில் சிங்கப்பூர் அரசு இந்த சலுகையை வழங்குகிறது.

மேலும் படிக்க – சிங்கப்பூரில் இருந்து வாரத்தில் 8 விமானங்கள்.. குறைந்த டிக்கெட் விலை.. எக்ஸ்க்ளூசிவ் “தீபாவளி” ஆஃபர் அறிவிப்பு!

மிக முக்கியமான விஷயம் என்னவெனில், தினமும் எம்ஆர்டியை பயன்படுத்தும் பயணிகளுக்கு லேண்ட் டிரான்ஸ்போர்ட் அத்தாரிட்டி டிராவல் ஸ்மார்ட் ஜர்னி ( LTA Travel Smart Programme) எனும் ஒரு திட்டத்தை சிங்கை அரசு அறிவித்துள்ளது. அதன்படி, தினமும் ஒருவர் எப்படி பயணிக்கிறார் என்பதை கணக்கில் கொண்டு அவருக்கான கஸ்டமைஸ்டு கார்டு வழங்கப்படுகிறது. இதன் மூலம் பயணிப்பவர்களுக்கு செலவு குறையும்.

இந்த திட்டத்தில் நீங்கள் பயணிக்கும் போது, LTA நீங்கள் பயணிக்கும் நாள், நேரம், ஸ்டேஷன் ஆகியவற்றை கண்காணிக்கும். அப்போது நீங்கள் அதிக கூட்டமுள்ள நேரத்தில் பயணித்துக் கொண்டிருந்தால், அது உங்கள் பயண நேரத்தை மாற்றியமைக்க சில பரிந்துரைகளை வழங்கும். அதன்படி நீங்கள் பயணிக்கும் பட்சத்தில் உங்களுக்கான செலவு குறையும்.

நீங்கள் கிரெடிட் வைத்திருந்தால் இன்னும் நல்லது. உங்கள் கிரெடிட் கார்டு மூலம் ஈஸி லிங்க் TRANSACTION செய்தால், நீங்கள் செலுத்தும் தொகையில் 2 சதவிகிதம் உங்கள் கேஷ் பேக் கிடைக்கும். இதுவும் பயண செலவை குறைக்கும் ஒரு வழிதான்.

எஸ்எம்ஆர்டி விங்க்+ என்ற ஆப் REWARDS வழங்கும். இதில் நீங்கள் எம்ஆர்டியில் நுழையும் போதும், வெளியே செல்லும் போதும் அதை கணக்கிட்டு உங்கள் ரிவார்ட்ஸ் பாயிண்ட்ஸ் வழங்கும். நீங்கள் எவ்வளவு பயணம் செய்கிறீர்களோ அவ்வளவு ரிவார்ட்ஸ் கிடைக்கும். இதில், 2வது முறையாக எம்ஆர்டி ஸ்டேஷன்களில் உள்ள QR Code-ஐ ஸ்கேன் செய்தாலும் கிடைக்கும் படி ஒரு திட்டம் இருந்தது. ஆனால், பலர் இதை புகைப்படம் எடுத்து வீட்டில் இருந்தே ஸ்கேன் செய்வது தெரியவந்ததால் இந்த திட்டம் நிறுத்தப்பட்டுவிட்டது.

இந்த ரிவார்ட்ஸ் பாயிண்ட்ஸ்களை கொண்டு கட்டண விலையை குறைக்க முடியாது. ஆனால், ஹோட்டல், ஷாப்பிங் பண்ணும் போது E-Vouchers இதன் மூலம் பெற முடியும்.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” தளத்தை பின்தொடருங்கள்

Related posts