SINGAPORE: ஒரு மிகப்பெரும் சாதனையை நோக்கி சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம் பயணம் செய்து வருகிறது.
ஆம்! பிரம்மாண்டமும், அழகும் நிறைந்த சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம், Skytrax-ன் சிறந்த விமான நிலையங்களின் பட்டியலில் கிட்டத்தட்ட 10 வருடங்கள் நம்பர்.1 இடத்தில் இருந்தது. ஆனால், கடந்த 2021-ல் Qatar’s Hamad International Airport முதல் இடத்தை தட்டிச் செல்ல, 2022ம் ஆண்டு, சாங்கி ஏர்போர்ட் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.
இப்போது நோய்த் தொற்று குறைந்து, உலக நாடுகளுக்கான கதவுகள் திறக்கப்பட்ட பிறகு, லட்சக்கணக்கான மக்கள் சிங்கப்பூருக்கு வந்து செல்கின்றனர். இந்த எண்ணிக்கை வரும் காலங்களில் இன்னும் பல மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, இப்போதே சிங்கை அதிகாரிகள் அதற்கான பணிகளை துவக்கிவிட்டனர்.
அதன்படி, சாங்கி ஏர்போர்ட்டில் 5வது டெர்மினல் குறித்த அப்டேட்டுகள் வெளியாகியுள்ளன. தேசிய தின பேரணியின் போது பேசிய சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங், ‘டெர்மினல் 5’ வருடத்திற்கு சுமார் 50 மில்லியன் பயணிகளை கையாளும் திறன் கொண்டதாக அமையும்.
அதாவது, சாங்கி ஏர்போர்ட்டில் தற்போது மொத்தம் உள்ள 4 டெர்மினல்களும் சேர்த்து, 82 மில்லியன் பயணிகளை கையாள்கின்றன. ஆனால், இந்த புதிய டெர்மினல் 5 ஆனது, சிங்கிளாக நின்று 50 மில்லியன் பயணிகளை கையாளும் திறன் கொண்டதாக பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டு வருகிறது.
ஏர்போர்ட்டில் 4 டெர்மினல்களையும் ஒன்று சேர்த்தால், எவ்வளவு பெரியதாக இருக்குமோ, அதைவிட பிரம்மாண்டமாக புதிய டெர்மினல் (T5) அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“நாங்கள் ஒரு புதிய சாங்கி விமான நிலையத்தையே கட்டி வருகிறோம். இது அவ்வளவு பெரியது” என்று பிரதமர் தெரிவித்திருந்தார்.
டெர்மினல் 5இன் கட்டுமானம் சுமார் இரண்டு ஆண்டுகளில் தொடங்கும். இது 2030ம் ஆண்டு பயணிகளின் போக்குவரத்துக்காக திறந்துவிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது மூன்று ஓடுபாதை அமைப்பைக் கொண்டிருக்கும். அதேசமயம், ஏர்போர்ட்டின் மற்ற நான்கு முனையங்களுடன் இணைக்கப்பட்டிருக்கும்.
மேலும் இந்த டெர்மினலில் சோலார் பேனல்கள் மற்றும் ஸ்மார்ட் கட்டிட மேலாண்மை அமைப்புகள் இடம்பெறும். அதுமட்டுமின்றி, இந்த கட்டிடத்தில் வெப்ப ஆற்றல் சேமிப்புடன் இணைந்த குளிரூட்டும் முறை பயன்படுத்தப்படும். குறித்த காலத்தில்… அதாவது 2030-ல் இந்த டெர்மினல் முடிக்கப்பட்டால், சிங்கப்பூர் எப்படிப்பட்ட நாடு என்பதை டெர்மினல் 5 (T5) இந்த உலகிற்குக் காண்பிக்கும்” என்றும் பிரதமர் லீ கூறினார்.