TamilSaaga

வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு வீழ்ச்சி… சிங்கப்பூர் டாலருக்கு எதிராக மண்ணை கவ்விய “pound”!

இன்று செப்டம்பர் 26, 2022 பங்குச் சந்தை தொடங்கியதில் இருந்து, சிங்கப்பூர் டாலருக்கு எதிரான pound மதிப்பு, இதுவரை இல்லாத அளவுக்கு குறைந்த அளவை எட்டியது.

இன்று காலை (£1) 1 பவுண்டுக்கான சிங்கப்பூர் டாலரின் மதிப்பு S$1.483 என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, ஒட்டுமொத்தமாக கடந்த 12 மாதங்களில் சிங்கப்பூர் டாலருக்கு எதிராக பவுண்டு 18.55 சதவீதம் சரிந்துள்ளது.

கடந்த 15 ஆண்டுகளில் சிங்கப்பூர் டாலருக்கு எதிராக பவுண்ட் 49 சதவீதத்திற்கும் அதிகமாக குறைந்துள்ளது.

மேலும் படிக்க – “அப்படியே திறமை பொங்கி வழியணும்”.. சிங்கப்பூரில் “Quality”-யான இந்திய ஊழியர்களை வளைத்துப் போடும் “அசைன்மென்ட்” – 5 ஆண்டுகளுக்கு விசா!

முன்னதாக, செப்டம்பர் 2007 இல், (£1) 1 பவுண்டு (S$3.03) சிங்கப்பூர் டாலராக இருந்தது.

இந்நிலையில், கடந்த செப். 22, 2022 அன்று Exchange rate இதுவரை இல்லாத அளவுக்கு (£1) 1 பவுண்டுக்கு (S$1.594) சிங்கப்பூர் டாலராக இருந்தது. இது கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சியாகும். அதுமட்டுமின்றி, வரலாற்றில் இவ்வளவு குறைவாக சிங்கப்பூர் டாலருக்கு எதிராக பவுண்டு மதிப்பு வீழ்ந்ததில்லை.

அதுமட்டுமின்றி, ஏறக்குறைய நான்கு தசாப்தங்களில் 1 பவுண்ட் மதிப்பானது 1.14 அமெரிக்க டாலர்களுக்கு கீழே சரிந்தது இதுவே முதல் முறையாகும்.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” தளத்தை பின்தொடருங்கள்

Related posts