லாட்டரி என்பது பலரது வாழ்க்கையை ஒரே நாளில், ஒரே இரவில் மாற்றக்கூடிய மந்திரக்கோல். ஆனால், அது அவ்வளவு சீக்கிரத்தில் எவருக்கும் கிடைத்துவிடாது. ஆசைப்பட்டவர்களுக்கெல்லாம் கிடைத்து விடாது. ஒருவேளை கிடைத்துவிட்டால், வாழ்க்கையே மாறிவிடும். அப்படியொரு மாற்றத்துக்காக, அதிர்ஷ்டத்துக்காக பலரும் வருடக்கணக்கில் இன்னமும் லாட்டரி சீட்டு வாங்கிக் கொண்டு தான் இருக்கின்றனர்.
நமது சிங்கப்பூர் மற்றும் அமீரகம் போன்ற நாடுகளில் இன்றளவும் அரசே இந்த லாட்டரி விற்பனையை நடத்தி வருகின்றது. அந்த வகையில் இந்த பதிவில் சிங்கப்பூர் TOTO Drawவில் எவ்வாறு பங்கேற்பது, வெற்றிக்கென்று தனி யுக்தி ஏதேனும் உள்ளதா? என்பது குறித்து காணலாம்.
நேற்று (ஆக.22) மாலை நடைபெற்ற குலுக்கலில், முதல் பரிசான 9 கோடியே 55 லட்சம் பரிசுத் தொகையை ஒருவரும் வெல்லவில்லை. அதுபோல, இரண்டாம் பரிசையையும் யாருமே ஜெயிக்கவில்லை. இந்நிலையில், வரும் ஆக.25 அன்று மாலை அடுத்த குழுக்கல் நடைபெறுகிறது. இதில், முதல் பரிசுத் தொகையாக 19 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், toto லாட்டரி ஜெயிப்பது குறித்து சீக்ரெட் ஃபார்முலா எதுவும் இருக்கிறதா என்பது குறித்து “Easwaran Speaks” என்ற youtube சேனல் வாயிலாக toto லாட்டரியில் பலவருட அனுபவம் உள்ள ஈஸ்வரன் என்பவர்கள் மிக தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளார்.
அவர் கூறுகையில், “முதலில் சிங்கப்பூர் முழுவதும் உள்ள ஏதேனும் ஒரு Singapore Pools நிலையத்தில் இருந்து 1 சிங்கப்பூர் வெள்ளி கொடுத்து நீங்கள் இந்த TOTO லாட்டரி சீட்டுகளை வாங்க வேண்டும். 1 முதல் 49 வரை ஏதேனும் 6 எண்களை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்.
எண்களை தேர்வு செய்த பிறகு அதை Singapore Pools நிலையங்களில் கொடுத்து உங்கள் 6 இலக்க எண்ணை பதிவு செய்து ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும். சிங்கப்பூரில் திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் இந்த TOTO Draw நடைபெறுவது வழக்கம். இவ்வரும் தான் TOTO Draw நடைபெறுகின்றது.
TOTO drawவில் மொத்தம் 7 தரநிலைகளில் பரிசுகள் அளிக்கப்படுகிறது, லாட்டரி குலுக்கல் நடைபெறும்போது நீங்கள் வாங்கிய 6 எண்களும் பொருந்தினால் உங்களுக்கு தான் அந்த ஜாக்பாட் பரிசான 1 மில்லியன் வெள்ளி.
அடுத்தபடியாக 6ல் 5 எண்கள் பொருந்தி அரசு தரும் ஒரு எக்ஸ்ட்ரா எண்ணும் பொருந்தும்பட்சத்தில் உங்களுக்கு Collection தொகையில் ஒரு பங்கு தரப்படும். 5 எண்கள் மட்டும் பொருந்தும் நபர்கள், அதேபோல 4 + Extra நம்பர் பொருந்தும் நபர்களுக்கும் அதே போல Collection தொகையில் பங்கு தரப்படும்.
இறுதியாக அரசு வெளியிடும் எண்களில் 3 எண்கள் உங்கள் டிக்கெட்டுடன் ஒத்துப்போனால் 10 வெள்ளியும், 3 + Extra நம்பர் ஒத்துப்போனால் 25 வெள்ளியும் 4 எண்கள் ஒத்துப்போனால் 50 வெள்ளியும் உங்களுக்கு கிடைக்கும். இந்த கடைசி மூன்று பரிசுகளும் Standard தொகையுள்ள பரிசுகள்.
Draw வெளியான அடுத்த நாளே உங்களுக்கு cheque வடிவில் நீங்கள் வென்ற தொகை உங்களுக்கு கிடைக்கும். அந்த காசோலையை நீங்கள் வங்கியில் கொடுத்து உங்கள் பரிசை பெற்றுக்கொள்ள முடியும்.
நீங்கள் TOTOவில் முதல் பரிசான 1 மில்லியன் வெள்ளி ஜெயித்தாலும் சரி அல்லது இறுதி பரிசான 10 வெள்ளி ஜெயித்தாலும் சரி இந்த பணத்திற்கு எந்தவித கமிஷன் மற்றும் வரி என்பது எதுவுமே இல்லை. நீங்கள் வென்ற பணம் அப்படியே உங்களை சேரும்.
சரி TOTOவை வெல்ல ரகசிய பார்முலா இருக்கா?
TOTOவில் 6 எண்களை தேர்ந்தெடுக்க மொத்தம் 1 கோடிக்கும் மேற்பட்ட காம்பினேஷன் உள்ளது. ஆகையால் இதில் கணக்குப்போட்டு வெல்வது என்பது சற்றும் முடியாத காரியம். ஆகவே இந்த லாட்டரி என்பது முழுக்க முழுக்க உங்கள் அதிர்ஷ்டத்தை நம்பி மட்டுமே உள்ளது. ஆகையால் இதை ஒரு பழக்கமாக மாற்றிக்கொள்ளாமல் பொதுபோக்குக்காக அவ்வப்போது மட்டுமே பங்கேற்பது மிகவும் நல்லது. காரணம் இதில் ஒரு முறை விளையாடி வென்றவரும் உண்டு. பலமுறை விளையாடி தோற்றவர்களும் உண்டு.
உங்களிடம் வேறு யாராவது வந்து, எனக்கு சக்ஸஸ் ஃபார்முலா தெரியும். அதை சொல்வதற்கு கமிஷன் வேண்டும் என்று சொன்னால், தயவு செய்து ஏமாற வேண்டாம். சிங்கப்பூருக்கு புதிதாக வரும் வெளிநாட்டு ஊழியர்களை குறிவைத்து ஒரு பெரும் கும்பலே இயங்கிவருகிறது. அதேபோல், மாத சம்பளம் வாங்கிவிட்டால், முதல் வேலையாக லாட்டரி சீட்டு வாங்கியே ஆக வேண்டும் என்ற மனநிலையை விட்டொழியுங்கள். உங்க உழைப்பே உங்களுக்கான வெற்றி, உங்களுக்கான வருமானம்” என்று தெரிவித்துள்ளார்.