TamilSaaga

சிங்கப்பூரில் எட்டுத்திக்கும் ஒலித்த ‘சிங்கை நாடு’ பாடல்… சிங்கை பிரதமரையே வியக்க வைத்த தமிழன்! – ஏ.ஆர்.ரஹ்மான் தரத்துக்கு சற்றும் குறையாத “சொக்கத் தங்கம்”!

நமது சிங்கப்பூரில் இன்று (ஆக.9) 57வது தேசிய தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சிங்கையில் ஆங்கிலம், சீனம், மலாய், தமிழ் ஆகிய மொழிகள் ஆட்சி மொழிகளாக இருக்கின்றன. இங்கு ‘முன்னேறு வாலிபா’ என தொடங்கும் தமிழ் பாடல் தேசிய கீதமாக உள்ளது. “முன்னேறு வாலிபா, முன்னேறி என்றும் தொடுவாய் நோக்குவாய்’ என்ற இப்பாடல், கடந்த 1967ம் ஆண்டு முதல் சிங்கப்பூரில் உள்ள பள்ளிகளிலும், அந்த நாட்டின் தேசிய அணிவகுப்பின் போதும் பாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழர் ஒருவரால் ‘சிங்கை நாடு’ என்ற பாடல் உருவாக்கப்பட்டது. புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து, ஒரு பாடல் பாடினால் எப்படி இருக்குமோ, அப்படியொரு தரத்தில், புல்லரிக்க வைக்கும் இசையில், தேசப்பற்று வீசும் வரிகளுடன் இப்பாடல் இயற்றப்பட்டது.

மேலும் படிக்க – 700 வெள்ளி.. 1200 வெள்ளி.. 2600 வெள்ளி சம்பளம்.. சிங்கப்பூரில் நான்கே வருடத்தில் அசுர வளர்ச்சி காட்டிய தமிழக ஊழியர்! ‘உங்களால் தான் முடியும்’ என்று திறமையை கண்டு மெச்சிய நிறுவனம்!

சிங்கையைச் சேர்ந்த தமிழக இசைக்கலைஞர் ஷபீர் என்பவரது முயற்சியில் உருவான இப்பாடல், 2012ம் ஆண்டு வெளியிடப்பட்டது. ‘முன்னேறு வாலிபா’ கோலோச்சிக் கொண்டிருந்த நேரத்தில் வெளியான இப்பாடல், சிங்கையின் அனைத்து தரப்பு மக்களையும் மிக எளிதாக சென்று சேர்ந்தது. காரணம், அதன் இசை, வரிகள் மற்றும் பாடகரின் குரல் தான். நாம் முன்பே சொன்னது போல், ரஹ்மானின் இசைத் தரத்தை சமன் செய்த பாடல் இது என்று உறுதியாகக் கூறலாம்.

இப்பாடலால் ஈர்க்கப்பட்ட சிங்கை பிரதமர் லீ, தனது ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கத்தில் பகிர்ந்தார். அந்தளவுக்கு அனைத்து தரப்பினரையும் இப்பாடல் ஈர்த்தது. இந்நிலையில், இன்று நடைபெறவுள்ள தேசிய தின அணிவகுப்பில் ‘சிங்கை நாடு’ பாடலை ஆயிரக்கணக்கான மக்கள் முன்பு ஷபீர் பாடவிருக்கிறார்.

“சிங்கை நாடு… எந்தன் வீடு’…

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts