சிங்கப்பூரை பொறுத்தவரை லாட்டரி டிக்கெட் விற்பனை என்பது சட்டபூர்வமான ஒன்று, சிங்கையில் உள்ள toto மற்றும் 4D குலுக்கல் லாட்டரி குறித்து பல தகவல்களை நமது தமிழ் சாகா சிங்கப்பூர் செய்தி நிறுவனம் பல முறை கட்டுரைகளாக வெளியிட்டிருப்பதை நீங்கள் அறிவீர்கள். TOTO வாரத்திற்கு 2 முறையும் 4D வாரத்திற்கு மூன்று முறையும் நடத்தப்படும் குலுக்கல் லாட்டரிகள் என்பதையும் நீங்கள் அறிவீர்கள்.
ஆனால் மாதம் 1 முறை மட்டுமே சிங்கப்பூரில் நடைபெறும் Singapore SWEEP குறித்து நீங்கள் அறியாத பல தகவல்களை இந்த பதிவில் அளிக்கப்பட்டுள்ளது.
Singapore SWEEP மாதம் 1 முறை மட்டுமே அதுவும் மாதத்தின் முதல் புதன்கிழமை மட்டுமே நடத்தப்படும் ஒரு குலுக்கல் லாட்டரி என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான கட்டணம் ஒரு லாட்டரி சீட்டுக்கு 3 வெள்ளி என்று விற்கப்பட்டு வருகின்றது.
பரிசு விவரங்களை முதலில் காணலாம்.
முதல் பரிசு – S$23,00,000 – ஒருவருக்கு மட்டுமே
இரண்டாம் பரிசு – S$5,00,000 – ஒருவருக்கு மட்டுமே
மூன்றாம் பரிசு – S$ 2,50,000 – ஒருவருக்கு மட்டுமே
ஜாக்பாட் பரிசு – S$ 10,000 – 10 பேருக்கு வழங்கப்படும்
லக்கி பரிசு – S$ 5,000 – 10 பேருக்கு வழங்கப்படும்
Gift பரிசு – S$ 3,000 – 30 பேருக்கு வழங்கப்படும்
Consolation பரிசு – S$ 2,000 – 30 பேருக்கு வழங்கப்படும்
Participation பரிசு – S$ 1,000 – 50 பேருக்கு வழங்கப்படும்.
இது தவிர 2D (Digit) Delight என்ற 6 வெள்ளி சிறப்பு பரிசு சரியாக 3,15,000 பேருக்கு வழங்கப்படும் (வெளியாகும் குலுக்கல் முடிவுகளில் அவர்கள் அளிக்கும் 2 இலக்க எண் இருந்தாலே அவர்கள் இந்த பரிசு பெற தகுதியுடையவர்கள் ஆவார்கள்)
(குறிப்பு) : முதல் முதல் கடைசி பரிசுக்கான தனித்தனி 7 இலக்க எண்களை சிங்கப்பூர் sweep நிறுவனம் வெளியிடும். நிறுவனம் வெளியிடும் 7 இலக்க எண்ணும் பங்கேற்பாளர்கள் வைத்திருக்கும் 7 இலக்க எண்ணும் ஒத்துப்போனால் அவர்களுக்கு பரிசு நிச்சயம்.
சரி எப்படி டிக்கெட் வாங்குவது?
TOTO மற்றும் 4Dயை போல சிங்கப்பூரில் உள்ள சிங்கப்பூர் pools நிலையங்களில் 3 வெள்ளி செலுத்தி சிங்கப்பூர் Sweep என்று கூறி இந்த குலுக்கலுக்கான சீட்டை பெறலாம். கம்ப்யூட்டரில் அச்சிடப்பட்ட 7 இலக்க எண் கொண்ட சீட்டு உங்களுக்கு வழங்கப்படும்.
அடுத்த sweep வருகின்ற ஆகஸ்ட் மாதம் 3ம் தேதி முதல் புதன்கிழமை அன்று நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.