நேற்று வெள்ளிக்கிழமை (ஜூலை 29) மனிதவள அமைச்சகத்தின் (MOM) முன்கூட்டிய மதிப்பீடுகளின்படி, சிங்கப்பூர் தனது எல்லைக் கட்டுப்பாடுகளை ஏப்ரல் முதல் தளர்த்தியதால், இந்த 2022ம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் சிங்கப்பூரில் உள்ள மொத்த வேலை வாய்ப்புகள் .அதிகரித்துள்ளன, குறிப்பாக வெளிநாட்டு ஊழியர்களின் வருகை அதிகரித்துள்ளது.
இதுகுறித்து MOM கூறியதாவது, இவ்வாண்டு அதிக அளவில் சிங்கப்பூர் குடியிருப்பாளர்கள் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர், அதே நேரத்தில் குடியுரிமை இல்லாத தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரை வலுவாக உயர்ந்துள்ளது என்றது.
அதே நேரத்தில் வேலையின்மை விகிதங்கள் பெருந்தொற்றுக்கு முந்தைய நிலைகளில் தான் இருந்தன என்றும், மேலும் ஆட்குறைப்பு எண்ணிக்கையும் குறைவாகவே இருந்தது என்றும் தெளிவுபடுத்தியுள்ளது. புலம்பெயர்ந்த வீட்டுப் பணியாளர்களைத் தவிர்த்து, சிங்கப்பூரின் மொத்த வேலைவாய்ப்பு இரண்டாவது காலாண்டில் 64,400 அதுவது 1.9 சதவீதம் அதிகரித்துள்ளது.
கட்டுமானம் மற்றும் உற்பத்தித் துறைகளில் வெளிநாட்டு ஊழியர்களை பணியமர்த்தியதுதான் இந்த உயர்வுக்குக் காரணம். “இந்த ஆண்டு ஏப்ரல் முதல் எல்லைக் கட்டுப்பாடுகளில் குறிப்பிடத்தக்க தளர்வு அளிக்கப்பட்டதன் மூலம், மேற்குறிய துறைகளில் உள்ள முதலாளிகள் பதவிகளை நிரப்பவும், அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்யவும் வெளிநாட்டு பணியாளர்களை பணியமர்த்தியுள்ளனர்” என்று MOM இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில் தெரிவித்துள்ளது.
உண்மையில் இந்திய போன்ற வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வர காத்திருக்கும் அனைத்து தொழிலாளர்களுக்கும் இது ஒரு சிறந்த சந்தர்ப்பமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. நல்ல முறையான பயிற்சியோடு அணுகினால் உங்களுக்கு சிங்கப்பூரில் ஒரு சிறந்த வேலை கிடைக்கும்.