TamilSaaga

சிங்கப்பூர் Toto Draw.. 11.4 மில்லியன் வெள்ளி டாப் பரிசு.. பங்குபோட்டுக்கொண்ட இரண்டு பேர் – இன்னும் பல சுவாரசிய தகவல்கள்!

சிங்கப்பூரில் நேற்று ஜூலை 14 அன்று இரவு நடந்த Toto டிராவின் இறுதிப் பரிசு S$ 8மில்லியனலிருந்து S$11.4 மில்லியனுக்கும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது இறுதியில் வெல்லும் இரண்டு டிக்கெட்டுகளுக்கு இடையில் பிரிக்கப்பட்டது என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஆகவே முதல் பரிசான S$11,462,599 இருவரால் பிரித்துக்கொள்ளப்பட்டுள்ளது, ஆகவே ஒரு நபருக்கு $$5,731,299 என்ற விகிதத்தில் பிரிக்கப்பட்டுள்ளது.

வென்ற இரு டிக்கெட்களின் விவரங்கள் பின்வருமாறு..

  1. டிக்கெட் வாங்கப்பட்ட இடம் – NTUC FairPrice கல்லாங் பாரு
    முகவரி : பிளாக் 71 கல்லாங் பாரு #01-529
    டிக்கெட் வகை: 1 Quick Pick Ordinary Entry
  2. Singapore Pools Accounts Betting Online Service
    டிக்கெட் வகை : iTOTO – சிஸ்டம் 12

நேற்று ஜூலை 14 அன்று நடந்த டோட்டோ டிராவில் அனைத்து வெற்றியாளர்களின் விவரம் கீழே உள்ள அட்டவணையில்..

அடுத்த toto draw வரும் 18 ஜூலை அன்று நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts