TamilSaaga

“அவருக்கு ஒரு Beer வாங்கித்தரனும்”.. சிங்கப்பூரில் பணத்தை தொலைத்த வெளிநாட்டவர் – பைசா குறையாமல் அப்படியே கிடைத்த Purse!

சிங்கப்பூரில் தற்போது வசித்து வரும் வெளிநாட்டவர் ஒருவர், சுமார் S$460 பணத்துடன் தொலைந்த தனது பணப்பையை கண்டுபிடித்து போலீசாரிடம் அளித்த அந்த மனிதரை பாராட்டி நன்றி தெரிவிக்க விரும்பி TikTok வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கிறிஸ் ஹென்டர்சன் என்ற அந்த நபர் தனது பணப்பையை இழந்த 10 நாட்களுக்குப் பிறகு, சிங்கப்பூர் காவல் படையிடமிருந்து (SPF) இருந்து ஒரு கடிதத்தை பெற்றுள்ளார். அதில் உங்கள் உடமைகளை வந்து பெற்றுக்கொள்ளவும் என்று குறிப்பிட்டிருந்தது.

போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட பொருட்களைப் பார்த்த பிறகு, ஹென்டர்சன் தனது பணப்பையில் வைத்திருந்த S$460 அப்படியே இருந்ததை எண்ணி மகிழ்ச்சியில் திளைத்துள்ளார். SPFக்கு யார் என் பணப்பையை கொண்டு வந்து கொடுத்தார்களோ தெரியவில்லை, ஆனால் அவருக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

பட்டப்பகலில் சுட்டுக்கொல்லப்பட்ட மலேசியார்.. மனைவி மற்றும் குழந்தையின் கண் முன்னே நடந்த கொடூரம் – இறந்தவர் தமிழரா?

அந்த நபருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் நல்லதே நடக்கும் என்று மனதார வாழ்த்தியுள்ளார். “இது முழுவதும் சிங்கப்பூர். மக்களின் நேர்மையை காட்டுகிறது, நீங்கள் யாரென்று எனக்கு தெரியாது ஆனால் எப்போது உங்களது உதவியை மறக்க மாட்டேன் என்று கூறியுள்ளார் அவர்.

“என்ன கன்றாவி இது”.. முகம் சுளித்த மக்கள்.. ஆண்குறி வடிவிலான பையில் Tea விற்ற ஹோட்டல் – இறுதியில் எடுத்த அதிரடி முடிவு

இது எனக்கு ஒரு அதிர்ஷ்டமான நாள் என்று கூறி, ஹென்டர்சன் தனது வீடியோவை முடித்தார், மேலும் எனக்கு இந்த உதவியை செய்தவர் யார் என்று தெரிந்தால் அவருக்கு ஒரு பீர் அல்லது காபி வாங்கிக்கொடுக்க ஆவலாக உள்ளேன் என்றும் கூறியுள்ளார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts