சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு இதுவொரு மிக முக்கியமான தருணம் என்று சொல்லலாம். அப்படியொரு உபயோகம் மிகுந்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது ஊதிய பிரச்சனை, பணியிடத்தில் காயத்தில் சிக்குவது உள்ளிட்டவை குறித்து வெளிநாட்டு ஊழியர்களுக்கு இலவச சட்ட ஆலோசனைகள், உதவிகள் வழங்குவதற்கு லிட்டில் இந்தியா பள்ளிவாசலில் சட்ட உதவிக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது.
இது Law Society Pro Bono Services (LSPBS) group என்று அழைக்கப்படுகிறது. லிட்டில் இந்தியா பள்ளிவாசலில் சட்ட உதவி அமைப்பு தொடங்கப்பட்டிருப்பது இதுவே முதன்முறை என்பது கூடுதல் தகவல்.
இந்த உதவிக் கூட மாற்று ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்கும். ஹிந்தி, பெங்காலி மற்றும் தமிழ் போன்ற மொழிகளில் அனைத்து மதங்களைச் சேர்ந்த வெளிநாட்டு ஊழியர்களும் இங்கு உதவிகளை பெறலாம்.
இதுகுறித்து LSPBS தலைவர் கிரிகோரி விஜயேந்திரன் கூறுகையில், வழிபாட்டுத் தலத்தில் பாதுகாப்பாக உணரும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை காரணமாக மசூதியில் கிளினிக்கைத் திறக்க முடிவு செய்ததாகக் கூறினார்.
இந்த கிளினிக்குகள் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது மற்றும் நான்காவது ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெறும். வெளிநாட்டு தொழிலாளர்கள் நேரில் சென்று ஆலோசனைக்கு விண்ணப்பிக்கலாம் அல்லது ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
முகவரி:
Angullia Mosque
265 Serangoon Road
Singapore 218099
Farrer Park MRT (purple line)-ல் இருந்து 4 நிமிடம் நடக்கும் தூரம்.
இங்குள்ள வழக்கறிஞர் உங்கள் பிரச்சனையைப் பற்றி உங்களுடன் பேசலாம் ஆனால் நீதிமன்றத்திற்குச் செல்ல உங்களுக்கு உதவ முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.