சிங்கப்பூர்: தொற்று காரணமாக இரண்டு வருடங்களாக செயல்படாமல் இருந்த அனைத்து இரவு சார்ந்த வணிகங்களும் ஏப்ரல் 19 முதல் முழுமையாக மீண்டும் திறக்க அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதென்ன இரவு சார்ந்த வணிகங்கள்?
பார்கள், பப்கள், கரோக்கி நிறுவனங்கள், டிஸ்கோதேக் மற்றும் இரவு விடுதிகள் போன்றவை மீண்டும் இயங்க அனுமதிக்கப்படுவதாக வர்த்தக மற்றும் தொழில் அமைச்சகம் (MTI) மற்றும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இரவு விடுதிகள் மற்றும் டிஸ்கோத்தேக் போன்றவைகளுக்கு செல்ல விரும்புவோர், சுகாதார அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட antigen rapid test (ART) எடுக்க வேண்டும்.
கோவிட்-19 சோதனையானது, முடிவு வந்ததிலிருந்து 24 மணிநேரத்திற்கு செல்லுபடியாகும் என்று அமைச்சகங்கள் தெரிவித்தன.
இந்த இடங்களுக்கு செல்ல விரும்புவோர், நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பும், அது முடிவதற்கு 24 மணிநேரத்திற்கு முன்பும் கண்டிப்பாக பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
பார்வையாளர்கள், பணியாளர்கள் போன்றோருக்கு இந்த சோதனை பொருந்தாது. அதேசமயம், (PCR) சோதனை முடிவும் அனுமதிக்கப்படுகிறது.