TamilSaaga

“உறுதி + புத்திசாலித்தனம் + பொறுமை..” கொக்கு போல காத்திருந்தால் சிங்கப்பூரில் நாம் தடம் பதிப்பது உறுதி – இந்த வீடியோவே சாட்சி

ஸ்மார்ட் ஒர்க்கும் வேணும், ஹார்ட் ஒர்க்கும் வேணும், செல்ப் மோட்டிவேஷன் அது நீதானே.. அண்மையில் வெளியான மாஸ்டர் திரைப்பட பாடலில் வரும் இந்த வரிகளை நிச்சயம் நம்மால் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. ஒரு மனிதன் உயர்ந்து வளர பல விஷயங்கள் தேவைப்படுகிறது, சொத்து சுகம் உள்ளவர்கள் ஒருபுறம் என்றால், ஒவ்வொரு நாளும் உதைத்து வாழும் மக்கள் மறுபுறம். அப்படிப்பட்ட மனிதர்களுக்குத் தான் இந்த பதிவு.

சொந்த குடும்பமே தான் நேசித்த பெண்ணை தவறாய் பேச.. நம்பிக்கை வைத்து தாலி கட்டிய இளைஞர் – சிங்கப்பூரில் வேலைக் கிடைத்து இன்று ஊர் தரும் “Respect” வேற லெவல்!

சில தினங்களுக்கு முன்பு பிரபல இந்திய தொழிலதிபரான ஆனந்த் கோபால் மஹிந்திரா (மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர்) தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை பகிர்ந்தார். இன்றைய தேதியில் இந்திய மீடியாக்களில் இதுவே ட்ரெண்டிங், சரி ஆனந்த் அப்படி என்ன வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார் என்று பார்த்தால் ஒரு சிறுவன் வித்யாசமான மீன் வலை ஒன்றை கொண்டு மீன் பிடிக்கும் வீடியோ தான் அது. உறுதி + புத்திசாலித்தனம் + பொறுமை = வெற்றி என்பதை நிரூபிக்கும் ஒரு ‘சிறுகதை’ தான் இந்த வீடியோ என்று கூறி அந்த வீடியோவை அவர் பகிர்ந்துள்ளார்.

அவர் வெளியிட்ட காணொளியில் ஒரு சிறுவன் நீரின் கரையோரம் ஒரு வித்யாசமான மீன் பொறி ஒன்றை வந்து நடுகிறான். பார்ப்பதற்கு நம்ம ஊர் கேணிகளில் இருக்கும் கயிறு அமைப்பு போல உள்ளது. அதனை தொடர்ந்து அந்த கயிற்றின் முனையில் பொறியாக வைப்பதற்கு ஏதோ மாவு போன்ற பொருளை செருகி இறுதியில் அந்த கயிற்றினை தண்ணீரில் போடுகிறான்.

சில மணிநேரம் காத்திருக்க கொத்துக்கொத்தாக மீன்கள் அவனுக்கு கிடைக்கிறது, சரி இந்த வீடியோ சொல்லும் பாடம் என்ன?. அந்த சிறுவனை போல உறுதியான மனத்தோடு சிங்கப்பூரர்களாகிய நாமும் இருக்க வேண்டும், சிங்கப்பூரில் வேலைதேடி வருபவர்களுக்கும் இது பொருந்தும். பிறகு நமது புத்திக்கூர்மையோடு எதை செய்தால் எது நடக்கும் என்பதை ஆராய்ந்து அந்த சிறுவன் வலை வீசியதை போல நாமும் செயல்பட வேண்டும்.

மலேசியர்களுக்கான மானிய விலை பெட்ரோல்.. சிங்கப்பூரர்கள் பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது – முன்னாள் பிரதமர் பரபரப்பு புகார்

இறுதியாக நாம் செய்த செயலுக்கு வெகுமதி கிடைக்கும் வரை நாம் பொறுமையோடு காத்திருக்க வேண்டும். அப்படி செய்தால் நிச்சயம் நமக்கு வெற்றி கிட்டும் என்பதே வீடியோ சொல்லும் பாடம். சிங்கப்பூரர்களாகிய நாம் மாபெரும் தொற்றில் இருந்து இரண்டு ஆண்டுகள் கழித்து மெல்ல மெல்ல தற்போது மீண்டு வருகின்றோம் என்பதை நாம் அறிவோம். இவ்வளவும் நமது மன உருத்திக்கும் புத்திசாலித்தனத்திற்கும் கிடைத்த வெற்றியே.

அதேபோல இந்த கொடிய தொற்று நம்மை விட்டு முழுமையாக நீங்கும் நாள் வரை பொறுமையோடு செயல்பட்டால், நமக்கு நாம் தேடும் வெற்றி கிடைத்துவிடும். தற்போது உங்கள் நிலை எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம், நீங்கள் வேலை தேடிக்கொண்டிருக்கலாம், சொந்த நாட்டிற்கு திரும்ப முடியாமல் இருக்கலாம். ஆனால் எது எப்படி இருந்தாலும் நமக்கான காலம் நெருங்கிக்கொண்டே இருக்கிறது ஆகையால் அந்த சிறுவனை போல பொறுமையோடு காத்திருப்போம்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts