TamilSaaga

சிங்கப்பூர் மலேசிய எல்லை.. “சரியாக 12 மணிக்கு குட்டி சைக்கிளில் Borderஐ கடந்த முதல் நபர்” – கைதட்டி வவேற்ற அதிகாரிகள்

இன்று ஏப்ரல் 1, 2022, சுமார் இரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் சிங்கப்பூர் மலேசிய நில எல்லைகள் திறக்கப்பட்ட நிலையில் மக்கள் பெருமகிழ்ச்சியில் உள்ளனர் என்றே கூறவேண்டும். இந்நிலையில் இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வில் மலேசியாவை சேர்ந்த Ho Yang Guang என்ற 46 வயது நபர் சரியாக 12 மணிக்கு சிங்கப்பூரிலிருந்து புறப்பட்டு தனது மலேசிய மண்ணை தொட்டு வரலாற்றில் நீங்காத இடம்பிடித்துள்ளார். அதிலும் அவர் எல்லையை கடக்க உபயோகித்த வாகனம் தான் இதில் Highlight.

14,340 நிறுவனங்கள்.. 117,100 வேலை வாய்ப்புகள்.. சிங்கப்பூரில் “Work Permit Holders”-களுக்கு இதுவரை இல்லாத “மெகா” வாய்ப்பு – MOM அறிவிப்பு

China Press ஜோகூர் ஊடகத்திற்கு பேட்டியளித்த அவர், “சரியாக 12 மணிக்கு தனது மடக்கக்கூடிய குட்டி சைக்கிளில், காஸ்வேயின் குறுக்கே சவாரி செய்து வந்ததாக” கூறினார். அவர் ஏற்கனவே கடந்த 2022 சீனப் புத்தாண்டின் போது VTL (நில) சேவைமூலம் மலேசியா சென்ற அனுபவத்தின் அடிப்படையில், மற்ற போக்குவரத்து முறைகளை விட இந்த சைக்கிள் முறை வேகமானது என்று ஏற்கனவே முடிவு செய்ததாகவும் அவர் கூறினார்.

இவரை போலவே மேலும் இருவர் சிறிய ரக ஸ்கூட்டர்களில் எல்லையை கடந்தது காண்போரை ஆச்சரியப்படுத்தியது. கடந்த 2020ம் ஆண்டு மார்ச் 28ம் தேதி தொற்றுநோயை கைய்யாளும் விதமாக மலேசியா அதன் நுழைவு மற்றும் வெளியேறும் முனையங்களை முடியது. இதனை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான நில இணைப்பு சரியாக 745 நாட்களுக்கு மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரில் இளம் பெண் முகத்தில் ஊற்றிய கொதிக்கும் எண்ணெய்.. சிதைந்த முகம் – “மீண்டு வருவேன்” என சபதமெடுத்து வாழ்க்கையை ஜெயித்த அற்புதம்!

இன்று ஏப்ரல் 1ம் தேதி இரவு 12 மணிக்கு எல்லைகள் திறக்கப்பட்ட நிலையில், காலை 8 மணி நிலவரப்படி, உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் வரிசையோ அல்லது கூட்டநெரிசலோ எதுவும் இல்லை என்று ஊடக தகவல்கள் தெரிவித்தன. ஜோகூர் சுங்கச்சாவடிகளிலும் மக்கள் உற்சாகத்துடன் காணப்பட்டனர், அங்கு பயணிகள் குடியேற்ற கவுண்டர்களை நோக்கி மகிழ்ச்சியோடு ஓடுவதைக்கூட நம்மால் காணமுடிந்தது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts