TamilSaaga

சிங்கப்பூரில் ஒரே நிறுவனத்தில் உழைச்சது போதும்.. அடுத்த பாய்ச்சலுக்கு தயாராகுங்க.. வேற கம்பெனிக்கு அதிக சம்பளத்தில் மாறுவது எப்படி?

தமிழர்கள் உள்பட பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டு ஊழியர்களுக்கு இரண்டாம் தாய் நாடக நமது சிங்கப்பூர் விளங்கி வருகின்றது. சிங்கப்பூரை நம்பி இங்கு வந்த தொழிலாளர்கள் நல்ல முறையில் முன்னேறி வருகின்றனர் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. இந்நிலையில் Singaporeல் பணிபுரிந்து வருபவர்கள் எப்படி புதிதாக ஒரு நிறுவனத்தில் வேலை செய்வது அதிலும் குறிப்பாக நல்ல சம்பளத்தில் எப்படி இன்னொரு நிறுவனத்திற்கு மாறுவது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

சிங்கப்பூர்.. “பெண்ணை நிர்வாணமாக்கி 12 மணிநேரம் மிரட்டிய கொடூரன்” : 70,000 வெள்ளி வரை மோசடி – சிறப்பு வைத்தியம் தர காத்திருக்கும் சிங்கை போலீஸ்

சிங்கப்பூரில் தற்போது வேலை செய்துகொண்டிருப்பவர்கள் சிங்கப்பூரிலேயே வேறு ஒரு நிறுவனத்திற்கு மாறவேண்டும் என்றால் நிச்சயம் பொறுமையும் நிதானமும் முதலில் வேண்டும். அதன் பிறகு இரு வழிகள் அவர்கள் முன்னே கிடைக்கும் அதில் எதை தேர்ந்தெடுப்பது என்பது தொழிலாளர்கள் விருப்பம்.

கல்வித்தகுதியை உயர்திக்கொள்வது.

சிங்கப்பூரில் நாம் குறிப்பிட்ட ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் நிலையில், நம் தொழில் சார்ந்த படிப்புகளை (Course) கற்றறிந்து செயல்படுவது ஒரு சிறந்த வழி. அப்படி நம் வேலைசெய்யும் துறை சார்ந்த கல்வியை கற்பது என்பது அந்த துறை குறித்தான நமது புரிதலை அதிகப்படுத்துகிறது. அதை கொண்டு சிங்கப்பூரில் வேறு வேலைக்கு நிச்சயம் நாம் விண்ணப்பிக்கலாம். அந்த வேலை நமக்கு கிடைக்கும் பட்சத்தில் நிச்சயம் முன்பை விட அதிக அளவிலான சம்பளமும் நமக்கு கிடைக்கும்.

அனுபவத்தை அதிகரித்துக்கொள்வது.

அனுபவ அறிவுக்கும் சிங்கப்பூரில் எப்போதும் வரவேற்பு உண்டு என்பதை நாம் மறந்துவிட கூடாது. நீங்கள் சிங்கப்பூரில் ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேரும்போது அங்கு குறைந்தது 4 ஆண்டுகள் வேலைப்பார்த்தாலே நிச்சயம் நீங்கள் அந்த துறையில் ஜாம்பவானாக மாற முடியும். அப்படி நீங்கள் பணி செய்யும் துறை சார்ந்த அறிவை உங்கள் அனுபவத்தை கொண்டு உயர்த்தும்போது அது நிச்சயம் உங்களுக்கு பெரிய அளவில் பலன்களை அளிக்கும். உங்கள் அனுபவ அறிவைக்கொண்டும் நீங்கள் சிங்கப்பூரில் வேறு வேலைக்கு விண்ணப்பிக்க முடியும். அது கிடைக்கும் பட்சத்தில் நல்ல சம்பளமும் வாங்க முடியும்.

சிங்கப்பூர் செல்ல “Entry Approval” தேவையா? இல்லையா?.. உண்மை புரியாமல் முன்பதிவு செய்து ஏர்போர்ட்டில் குவிந்த பயணிகள் – பணம் திரும்ப கிடைக்காததால் ஆத்திரம்

News Source
நந்தனா ஏர் டிராவல்ஸ்
திருச்சி விமான நிலையம் திருச்சி 620 007
9600 223 091

ஆகவே இந்த இரு வழிகளை பின்பற்றினாலே சிங்கப்பூரில் நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தில் இருந்து புது நிறுவனத்துக்கு அதிக சம்பளத்துக்கு மாறும் வாய்ப்புகள் கிடைக்கும்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts