சிங்கப்பூரில் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள முதல் மின்சார வாகனம் அதன் உரிமத்தை தற்போது பெற்றுள்ளது. இது போன்ற சேவைகளை நாடளாவிய ரீதியில் உள்ள முதியோர்களுக்கு மிகவும் அணுகக்கூடியதாகவும் வசதியாகவும் ஆக்கியுள்ளது என்றே கூறலாம். இந்த எலக்ட்ரிக் பேருந்து இன்று முதல் சிங்கப்பூர் முழுவதும் தனது சேவையை துவங்கு என்பது குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் தொண்டு நிறுவனமான Sata CommHealthக்கு சொந்தமான இந்த பேருந்து, தடுப்பூசிகள் மற்றும் மருத்துவ ஆலோசனைகளை நடத்தவும் பயன்படுத்தப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று திங்கள்கிழமை (மார்ச் 14) அதிகாரப்பூர்வமாக சுகாதார அமைச்சர் ஓங் யே குங்கால் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. முதலில் இந்த பேருந்தின் சேவை முதலில் Sata CommHealth தொண்டு நிறுவனத்தின் ஊனமுற்றோருக்கான பிஷன் இல்லம் உள்பட 24 கூட்டாளர்களுக்குக் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அதிகபட்சமாக ஒரே நேரத்தில் இரண்டு நோயாளிகளை சோதனை செய்யக்கூடிய வசதிகள் இந்த பேருந்தில் உள்ளது.
விழித்திரை புகைப்படம் எடுத்தல், இரத்த அழுத்த பரிசோதனை, நீரிழிவு பாத பரிசோதனை மற்றும் தடுப்பூசிகள் போன்ற சேவைகளை வழங்கும் இந்த பேருந்தில், அடிப்படை மருந்துகள் இருப்பு வைக்கப்படும். மேலும் இந்த பேருந்தில் பதிவு மற்றும் ஆவணப் பணிகளில் உதவ ஒரு மருத்துவர், ஒரு செவிலியர் மற்றும் இரண்டு நிர்வாக ஊழியர்கள் இருப்பார்கள். மேலும் Sata CommHealth நிறுவனத்தின் 75வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையிலும் இந்த வாகனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அதன் தலைமை செயல் அதிகாரி டாக்டர் கெல்வின் புவா கூறியதாவது : “மருத்துவமனைகளுக்கு நீண்ட தூரம் செல்ல வேண்டிய முதியோர்களின் அணுகலை அதிகரிக்கவும், முதியவர்களைக் கவனித்துக் கொள்ளவும் இந்த மின்சார மருத்துவப் பேருந்து உதவும்” என்றார்.
வழக்கமான டீசல் பேருந்தை பயன்படுத்தினால், ACயை உபயோகிக்க வெளிப்புற ஜெனரேட்டர் தேவைப்படலாம். ஆனால் அது சுற்றுசூழலுக்கு பாதிப்பினை ஏற்படுத்தலாம். ஆனால் முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட இந்த மின்சாரப் பேருந்து 200 கிமீ வரை ஓடக்கூடிய திறன் கொண்டது, மற்றும் ஒரு நாள் முழுவதும் தேவைப்படும் சேவைகளுக்கு சக்தியை தருகின்றது. தற்போது, Sataவின் கைவசம் 10 டீசல் வாகனங்களைக் கொண்டுள்ளது. அவை பல்வேறு அளவுகளில் வருகின்றன, மேலும் அவை X-ரே மற்றும் மேமோகிராம் திரையிடல் போன்ற பல்வேறு திறன்களைக் கொண்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.