TamilSaaga

Air India Express : அக்டோபர் வரை சிங்கப்பூர் தமிழகம் புக்கிங் துவக்கம் – Date Change, Name Change, Destination Change செய்ய முடியுமா? – உங்களுக்காக பல Exclusive தகவல்கள்

சிங்கப்பூர் மற்றும் தமிழகத்தின் திருச்சி, சென்னை மற்றும் மதுரை ஆகிய முக்கிய நகரங்களுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை நிறுவனம் விமானங்களை இயக்கவுள்ளது. இருமார்கமாக செயல்படும் இந்த சேவைக்கான டிக்கெட்கள் வரும் 27 மார்ச் 2022 முதல் 30 அக்டோபர் 2022 வரை புக்கிங் துவங்கியுள்ளது. சிங்கப்பூர் திருச்சி மார்க்கமாக அனைத்து வாரங்களிலும் செவ்வாய், புதன், வியாழன் மற்றும் ஞாயிற்று கிழமைகளில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் இயக்கப்படும். அதேபோல திருச்சி மாற்று சிங்கப்பூர் மார்க்கமாக வாரத்தின் அனைத்து நாட்களிலும் விமானங்கள் இயக்கப்படும்.

“சிங்கப்பூர் வந்திறங்கும் இந்திய பயணிகளுக்கு மேலும் ஒரு தளர்வு” : இனி நீங்க தாராளமா பொது போக்குவரத்தை பயன்படுத்தலாம் – முழு விவரம்

அதேபோல சிங்கப்பூர் மற்றும் சென்னை இரு மார்க்கமாக அனைத்து வாரங்களிலும் திங்கள் மற்றும் வியாழன் கிழமைகளிலும், சிங்கப்பூர் மற்றும் மதுரை இருமார்கமாக செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் விமானங்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சில exclusive தகவல்கள்

Date Change உண்டா?

மேற்குறிப்பிட்ட தேதிகளில் நீங்கள் டிக்கெட் புக் செய்தால் நிச்சயம் விமான சேவை நிறுவனத்தின் விதிகளுக்கு உட்பட்டு பயண தேதியில் மாற்றம் செய்யலாம். அதேபோல அந்த பயண தேதி மாற்றத்திற்கு நிச்சயம் தனியாக கட்டணம் வசூலிக்கப்படும்.

டிக்கெட் Cancel செய்தால் Refund உண்டா?

உங்களுடைய பயண நேரத்திற்கு 24 மணிநேரத்திற்கு முன்பு நிச்சயம் உங்களால் டிக்கெட் cancel செய்து Refund பெறமுடியும். இந்த Refund உங்களுக்கு கிடைப்பதற்கு 1 முதல் 7 நாட்கள் வரை ஆகலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

நீங்கள் பயணம் செய்யும் Destinationஐ உங்களால் மாற்றமுடியுமா?

Airlines அனுமதி இருந்தால் நிச்சயம் உங்களால் Destination Change செய்யமுடியும். அதாவது நீங்கள் சிங்கப்பூர் – திருச்சி பயணம் செய்ய புக் செய்து, பிறகு சிங்கப்பூரில் இருந்து சென்னை செல்ல Destination மாற்றம் செய்யவேண்டும் என்றால் நிச்சயம் விமான சேவை நிறுவனம் அனுமதி அளித்தால் மாற்றம் செய்யமுடியும்.

சிங்கையில் மார்ச் 31 வரை Oral-B எலக்ட்ரிக் டூத் பிரஷ் இலவசம்

புக் செய்யப்பட்ட டிக்கெட்டில் உள்ள பெயர் மாற்றம் செய்யமுடியுமா?

டிக்கெட்டில் பெயர் மாற்றம் என்பது மிகவும் அரிதாக காணப்படும் ஒரு விஷயம் என்றபோது, சில சமயங்களில் விமான பயணமே ரத்தாகும் அளவிற்கு பிரச்சனைங்களை கொண்டது தான் பெயர் மாற்றம். அந்த வகையில் உங்கள் விமான பயணத்தின்போது டிக்கெட்டில் உங்கள் பெயர் மாற்றம் செய்யவேண்டும் என்றால் நீங்கள் 3 எழுத்துக்கள் வரை மற்றம் செய்யலாம்.

உதாரணமாக ANBARASAN என்ற பெயர் தவறுதலாக ANBUARSN என்று டிக்கெட்டில் பதிவாகி இருந்தால் அதை நீங்கள் மாற்றிக்கொள்ள முடியும்.

News Source
நந்தனா ஏர் டிராவல்ஸ்
திருச்சி விமான நிலையம் திருச்சி 620 007
9600 223 091

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts