தேவ் பர்காஷ் என்பவர் இந்தியாவைச் சேர்ந்த சிங்கப்பூர் பிரஜை. அவருடைய பெண் தோழி சீனாவைச் சேர்ந்தவர். இந்நிலையில், சில வாரங்களுக்கு முன்பு இருவரும் வெளியே சென்றிருந்தபோது, 60 வயதான நபர் ஒருவர், தேவ்-விடம் சென்று, “ஒரு இந்தியர், சீனப் பெண்ணை தோழியாக கொண்டிருப்பது இனவெறி” என்று கூறியிருக்கிறார்.
இதுகுறித்த வீடியோவை ஆதாரத்தோடு தேவ் வெளியிட, விஷயம் வைரல் ஆக தொடங்கியது. இதுகுறித்து அப்போது கருத்து தெரிவித்த உள்துறை மற்றும் சட்ட அமைச்சர் கே.சண்முகம், இன சகிப்புத்தன்மை குறித்து சிங்கப்பூர் “சரியான திசையில் நகர்கிறதா” என்று “உறுதியாக தெரியவில்லை” என்று தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் 60 வயதான Tan Boon Lee தனது கருத்துக்களுக்காக மன்னிப்பு தெரிவித்துள்ளார். முன்னாள் பாலிடெக்னிக் கல்லூரியின் முன்னாள் விரிவுரையாளராக டன் பூன் டேவ் மற்றும் ஹோ குறித்து தான் பேசிய கருதிற்காக வருத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில் “திரு பர்காஷ், செல்வி ஹோ மற்றும் அவர்களது குடும்பத்தினரிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறன். எனது சொற்களால் புண்படுத்தப்பட்ட சிங்கப்பூர் சமூக மக்களிடமும் நான் மனதார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
மேலும் ‘எனது குறைபாடுகளை நான் இப்பொது உணர்கிறேன், இந்த சம்பவத்திலிருந்து நான் பல விஷயங்களை கற்றுக்கொள்ள விரும்புகிறேன். எனது குடும்பத்தினர், நண்பர்கள், மற்றும் சிங்கப்பூர் சமூகத்தின் ஆதரவோடு, நான் மீண்டும் அதே தவறுகளைச் செய்யாமல் இருப்பதை உறுதி செய்வேன்” என்றும் கூறியுள்ளார்.