“இங்க இருக்குடா அமெரிக்க”, என்று அப்பா கூற “கிட்டார்” எடுத்துக்கொண்டு காதலியை காண வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளும் நாயகர்களை திரையில்கண்டிருப்போம். நிஜத்திலும் கூட பல ஆண்கள் காதலியை காண கண்டம் விட்டு கண்டம் சென்ற உண்மை சம்பவங்களையும் பார்த்திருப்போம். சில வருடங்களுக்கு முன்பு தனது Facebook காதலியை காண வேறு நாட்டிற்கு சென்று, அங்கு ஏற்பட்ட சிக்கலில் போலீசாரிடம் சிக்கி சில ஆண்டு சிறைவாசம் அனுபவித்த காதலர்களும் இங்கு உண்டு. அந்த வகையில் ஆணைகளுக்கு எந்தவிதத்திலும் குறைவில்லாத இன்னும் சொல்லப்போனால் ஆண்களை விட மனதளவில் அதிகம் பலம் கொண்ட பெண்களும் காதலுக்காக பல விஷயங்களை செய்கின்றனர்.
அந்த வரிசையில் Facebook காதலுக்காக நாடு விட்டு நாடு வந்த ஒரு இலங்கை பெண்ணின் கதை இணையத்தில் வைரலாகி வருகின்றது. அண்டை நாடான இந்தியாவின் சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூரை சேர்ந்ததவர் தான் சரவணன். முகநூல் வழியாக இலங்கையை சேர்ந்த நிஷாந்தினி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். சுமார் ஐந்து ஆண்டு காலமாக இணைய வழியில் இவர்கள் காதலர் மலர்ந்து வளர ஒரு கட்டத்தில் திருமணம் செய்ய இருவரும் முடிவெடுத்துள்ளார்.
இதனையடுத்து துணிந்து காலத்தில் இறங்கிய இலங்கை பெண் நிஷாந்தினி Tourist Visa எடுத்துக்கொண்டு சேலம் சென்றுள்ளார். இருவரும் அவர்களின் ஐந்தாண்டு காதலுக்கு சாட்சியாக சேலம் அருகே உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்துகொண்டனர். உடனே தங்கள் திருமணத்தை பதிவு செய்ய அரசை நாடியபோதுதான் அவர்களது திருமணத்தில் இருந்த சட்ட சிக்கல் அவர்களுக்கு தெரியவந்தது. இதனால் அந்த ஜோடி செய்வதறியாது தற்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு கொடுத்துள்ளார்.
இருப்பினும் அவர் வந்த Tourist Visa காலம் முடியவிருப்பதால் திருமணமாகியும் சேர்ந்து வாழமுடியாமல் அந்த ஜோடி தவித்து வருகின்றது. விரைவில் அந்த ஜோடிகளுக்கு சட்ட ரீதியாக உள்ள சிக்கல் மறைந்து இன்பமான வாழக்கை அமையவேண்டும் என்று அனைவரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.