TamilSaaga

Tampines பகுதியில் பரபரப்பு – 1 லட்சம் வெள்ளி மதிப்புள்ள போதை பொருள்களுடன் இருவர் கைது

சிங்கப்பூரின் டாம்பைன்ஸ் பகுதியில் சுமார் 1,02,000 வெள்ளி மதிப்புள்ள பல போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த நிகழ்வு தொடர்பாக போதை ஒழிப்புத்துறை அதிகாரிகள் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணை கைது செய்துள்ளனர்.

கடந்த திங்கள்கிழமை பிற்பகலில் டாம்பைன்ஸ் பகுதியில் தெரு 83ன் அருகே சிங்கப்பூரரைச் சேர்ந்த 65 வயதுடைய ஆணையும் 55 வயது பெண்ணையும் போதை பொருள் தடுப்பு அதிகாரிகள் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அந்த நபரிடம் இருந்து மொத்தம் 938 கிராம் ஹெராயின் போதை பொருள் மற்றும் $ 7,000 ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அந்த பகுதியில் அமைந்துள்ள அந்த ஆடவரின் இல்லத்திற்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார், அங்கு நடந்த தேடலில் சுமார் 36 கிராம் ஹெராயின், 2 கிராம் கஞ்சா, 60 கிராம் புதிய மனோ பொருட்கள் மற்றும் சுமார் $ 50,929 ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் இந்த தேடுதல் நடவடிக்கையின் போது மொத்தம் 330 நைட்ரஸெபம் மாத்திரைகளும் மீட்கப்பட்டன.

Related posts