சீனாவின் நான்ஜிங்கி பகுதியில் பெண் ஒருவர், தன்னைத் துன்புறுத்தியதாகக் கூறி ரயில் பெட்டியில் இருந்த ஒருவரை மூன்று நிமிடங்களுக்கும் மேல் பலமுறை அறைந்த சம்பவம் அங்கு சற்று நேரம் சலசலப்பை ஏற்பட்டது. சீன ஊடகமான Sohu வெளியிட்ட தகவலின்படி, கடந்த ஜனவரி 4ம் தேதி மாலை 6:30 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அப்பெண் அந்த நபரை அறைந்தபோது அவர் நிமிர்ந்து பார்க்கவில்லை என்றும் மேலும் அந்த நபர் தலை குனிந்த நிலையில் அமர்ந்திருந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்தார்.
அந்த பெண் அவரை அறைந்து கொண்டிருக்கும் போது, அந்தப் பெண் பேசியது அனைவருக்கும் கேட்டது. “நீ என்னை தொட விரும்புகிறாயா? எங்கே மீண்டும் என்னைத் தொட்டுப் பாரு” என்று உரத்தக்குரலில் அவர் கூறினார். ஆனால் அதற்கு அந்த ஆண் எந்தவித பதிலும் கூறாமல் தலையை குனிந்தே இருந்தார். ரயிலில் சுற்றியிருந்த மற்ற பயணிகள் அமர்ந்து அந்த சம்பவத்தை பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்கள் யாரும் அந்த விஷயத்தில் தலையிடவில்லை. பின்னர் அந்த நபர் ஒரு ரயில்வே ஊழியர் மூலம் ரயில் பெட்டியில் இருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டார்.
சீன ஊடகமான Sohu வெளியிட்ட தகவலின்படி, நான்ஜிங் பொது பாதுகாப்பு பணியகம் ரயிலில் பயணித்த 27 வயது பெண்ணின் தவறாக நடந்துகொண்ட 32 வயது ஆடவரை தடுத்து வைத்துள்ளது என்று தகவல் வெளியிட்டது. அந்த நபர் சட்டத்தின்படி நிர்வாகக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.