சிங்கப்பூரில் திரு. லிம் செங் மோங் என்ற நபர் தனது பெயரில் சுமார் 89 முறை மர்மமான பரிவர்த்தனைகளுடன் தொடர்புடைய 20,000 டாலருக்கும் அதிகமான கிரெடிட் கார்டு கடனைத் கட்ட தவறிவிட்டதாகத் அந்த வாங்கி அவரை தொடர்புகொண்டபோது லிம் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார். இதனையடுத்து “முதலில் நான் ஏமாற்றப்பட்டேன் என்று நினைத்தேன், ஆனால் கிரெடிட் கார்டு நிறுவனம் இவை அனைத்தும் முறையான பரிவர்த்தனைகள் தான் என்றும் தங்களால் எதுவும் செய்ய முடியாது என்றும் கூறினர்” என்றார் சிங்கப்பூரில் உள்ள ஒரு ஜெர்மன் நிறுவனத்தில் தயாரிப்பு மேலாளராக பணிபுரியும் 56 வயதான திரு. லிம்.
அதன் பிறகு சில முயற்சிகளுக்கு பிறகு தான் லிம்-மின் 18 வயது மகளின் “Grab” கணக்கு மூலமாகத்தான் இந்த பணம் செலவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. அவரது கணக்கு லிம்-மின் கிரெடிட் கார்டுடன் இணைக்கப்பட்டது மற்றும் அவரது போக்குவரத்து செலவுகளை ஈடுசெய்யும் வகையில் இருந்தது என்று கண்டுபிடிக்கப்பட்டது. தந்தைக்கு தெரியாமல், அந்த 18 வயது இளம்பெண் தனது இ-வாலட்டை ஜென்ஷின் இம்பாக்ட் என்ற மொபைல் கேமுடன் இணைத்து, தான் விளையாடும் அந்த விளையாட்டிற்காக, கடந்த ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை செலவழித்துள்ளார்.
இது அதிக அளவிலான பணம் என்றும், அவள் வெளிநாட்டு பல்கலைக்கழகத்திற்குச் சென்று படித்தால், அவள் செலவுசெய்த பணத்தை வைத்து ஒரு வருட பள்ளிக் கட்டணம் செலுத்தியிருப்பேன்” என்று தனது மகளிடம் கூறியதாக திரு. லிம் தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் கூறினார். கண்ணிமைக்கும் நேரத்தில் மிகப்பெரிய அளவிலான தொகை செலவு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். டிஜிட்டல் மயமாக்கலின் அதிகரிப்புடன் அதிகமான இளைஞர்கள் இத்தகைய பரிவர்த்தனைகளுக்கு ஆளாகுவதால், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் ஆன்லைன் செலவினங்களால் பெரும் தொகையை கால் பில்களுக்கு ஒதுக்குவது போன்ற கதைகள் தற்போது மிகவும் பொதுவானதாகிவிட்டன.
டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை கையாளும் நிறுவனங்கள் இப்போது பெற்றோரை தங்கள் குழந்தைகளின் செலவுகள் குறித்து எச்சரிக்கையாக இருக்கவும் அறிவிப்புகளை அமைக்குமாறு எச்சரித்து வருகின்றன. சீன நிறுவனத்தின் அந்த கேம் செப்டம்பர் 2020ல் தொடங்கப்பட்டதிலிருந்து US$2 பில்லியனுக்கும் (S$2.7 பில்லியன்) சம்பாதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.