குடும்ப சூழ்நிலையை கருதி தனது குடும்பத்தை காத்திட நமது சிங்கப்பூர் போன்ற பல வெளிநாடுகளுக்கு செல்லும் தொழிலாளர்களின் நிலை, தற்போது உலகெங்கும் பரவி வரும் இந்த வைரஸ் நோயால் ஒருபுறம் கொடூரமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில். வேலை செய்யும் இடங்களிலும் பொது இடங்களிலும் நிகழும் விபத்துகளில் சிக்கி இறக்கும் தொழிலாளர்களின் உடல்களை மீண்டும் தாயகம் கொண்டு செல்வதும் ஒரு சவாலான விஷயமாகவே தற்போது மாறியுள்ளது.
தமிழகத்தில் இருந்து வேலைக்காக வெளிநாடு செல்பவர்களில் சிலர் துரதிஷ்டவசமாக இறக்கும் தருவாயில் அவர்களது உடல் உரிய ஆவணங்கள் பூர்த்திசெய்யப்ட்டு தமிழகம் கொண்டுசெல்லப்படும். இந்நிலையில் குடும்பத்திற்காக உழைக்க ஓமான் நாட்டிற்கு சென்ற தஞ்சை தொழிலாளி ஒருவர் வெளிநாடு சென்ற மூன்றே மாதத்தில் ஓமான் நாட்டில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூரில் உள்ள பட்டுக்கோட்டையில் உள்ள நவிக்காடு பகுதியை சேர்ந்தவர் தான் தொழிலாளி குமார்.
இவர் ஓமான் நாட்டிற்கு வேலைக்கு மூன்று மாதங்கள் மட்டுமே ஆன நிலையில் மரணம் தஞ்சை தமிழர் குமாரை தழுவி கொண்டது. இந்நிலையில் இந்த செய்தி அறிந்து அதிர்ந்த குமாரின் உறவினர்கள் அவரது உடலை தஞ்சை கொண்டுவர வழிதெரியாமல் இருந்த நிலையில் குமார் பணிபுரிந்த நிர்வாகத்திடம் பேசி நிர்வாகத்தின் முழு ஒத்துழைபோடு வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் நலச்சங்கம் குமாரின் உடல் தாயகம் கொண்டு வர முழு ஒத்துழைப்பு கொடுக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
ஆகவே அந்த நலசங்கத்தின் உதவியால் குமாரின் உடல் விரைவில் திருச்சி வழியாக தஞ்சை கொண்டுவரப்படும் என்று நம்பப்படுகிறது.
News Source
நந்தனா ஏர் டிராவல்ஸ்
திருச்சி விமான நிலையம் திருச்சி 620 007
9600 223 091