TamilSaaga

உயிரிழந்த ஹிந்து.. கண்ணீர் விட்டு கடைசி வரை நின்று அடக்கம் செய்த இஸ்லாமியர்கள் – மனதை உருக வைத்த சம்பவம்

ஜாதி, மதம், இனம் தாண்டி மனிதமே சிறந்தது என்பதை நிரூபித்த சம்பவம் இது.

மதுரையில் “ஐயா” என்று அழைக்கப்படக் கூடியவர் சுப்ரமணி. இவர் SDPI கட்சியின் ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத்தின் முன்னாள் துணைத்தலைவரும், மதுரை வடக்கு மாவட்டத்தின் செயற்குழு உறுப்பினரும் ஆவார்.

எஸ்டிபிஐ கட்சியின் துவக்க காலத்திலிருந்தே தன்னை கட்சியில் இணைத்துக் கொண்டு பணியாற்றி வந்த சுப்ரமணி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இதையடுத்து, சுப்ரமணி சார்ந்த மத முறைப்படி அவரது உடல் நல்லடக்கம் நடைபெற்றது.

அதில், எண்ணற்ற இஸ்லாமியர்கள் திரளாக கலந்து கொண்டு, அவரது மறைவு காரணமாக கண்ணீர் விட்டு அழுதனர். கடைசிவரை அவரது இறுதிச் சடங்கில் உடனிருந்தனர்.

அதுமட்டுமின்றி, அவரது உடலை மெகா ஊர்வலமாக இஸ்லாமியர்கள் நடத்தினர். சுப்ரமணியின் உறவினர்களுடன் சென்று கடைசி வரை கூட நின்று இறுதிச் சடங்கை நடத்தி முடித்தனர்.

இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட பலரும், “இதுதான் எங்கள் ஹிந்து – இஸ்லாமிய உறவு. இதை யாராலும் பிரிக்க முடியாது. இதுதான் நாங்கள்” என்று கூறினர்.

இந்த சம்பவம் அப்பகுதி மக்களை நெகிழ்ச்சியடையச் செய்தது.

Related posts