மலேசியாவின் சிலாங்கூர் மொத்த விற்பனை சந்தையில் குடிநுழைவு அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி சோதனையில் அந்த சந்தையில் பணியாற்றிய இந்தியர் உள்பட 72 வெளிநாட்டுத் தொழிலாளர்களை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இந்த சோதனையில் கைதானவர்களில் ஐ.நா அகதிகள் ஆணையத்தின் அகதிகள் அட்டையைக் கொண்ட 39 பேரும் மேலும் வங்கதேசத்தைச் சேர்ந்த 19 பேரும் மற்றும் இந்தோனேசியாவை சேர்ந்த 3 பேரும், இந்தியார் ஒருவரும், நேபாளி ஒருவரும் மேலும் மியான்மார் நாட்டை சேர்ந்த 9 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்ட அனைவரும் முறையான உரிமம் இல்லாமல் மலேசியாவிற்குள் வந்துள்ளனர் என்றும், ஆதலால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் மலேசியாவின் துணை உள்துறை அமைச்சர் இஸ்மாயில் முகமது தெரிவித்துள்ளார்.
ஐ.நா அகதிகள் ஆணையத்தின் அகதிகள் அட்டையைக் கொண்ட 39 பேரும் போலியான அகதிகள் அட்டையை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.