சுற்றுலா பயணிகளை அதிகமாக வரவேற்கும் பல நாடுகளின் பட்டியலை இதுவரை நாம் பார்த்திருப்போம். ஆனால், சுற்றுலாத்துறையில் பின்தங்கி இருக்கும் உலகத்தின் கடைசி நாட்டினை பற்றி உங்களுக்கு தகவல்கள் தெரியுமா.Nine island என்று அழைக்கப்படும் பொலினேசியா நாடு தான் அது. ஆஸ்திரேலியா மற்றும் ஹவாய் நாடுகளுக்கு இடையே மேற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்திருக்கும் அழகிய நாடு தான் இது.
நாட்டில் பலத்தீவுகள் இருந்தாலும் ஆறு தீவுகளில் மட்டுமே மக்கள் வசிக்கின்றனர். உலகிலேயே நான்காவது சிறிய நாடு இதுவாகும். நாட்டில் வசிக்கும் மொத்த மக்களில் மூன்றில் பங்கு மக்கள் மட்டுமே தலைநகரில் வசிக்கின்றனர். ஒரே ஒரு சிறிய விமான நிலையத்தை கொண்ட இந்த நாட்டில் அடிக்கடி சூறாவளி காற்று வீசும் என்பதால் மக்கள் அவதிக்குள்ளாவதுண்டு. இந்த நாட்டில் உபயோகப்படுத்தப்படும் மின்சாரத்தில் 95 சதவீதம் சோலார் பேனல்கள் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. மொழியினைப் பொறுத்தவரை ஆங்கில மொழியே மக்களால் பேசப்படுகின்றது. வாழ்வாதாரத்தை பொறுத்தவரை மக்கள் மீன் பிடித்தல், பன்றிகள் வளர்ப்பு, முத்துக்குளித்தல் மற்றும் தென்னை மர சாகுபடி இவற்றை நம்பி உள்ளனர்.
இந்த நாட்டில் மக்கள் தொகை மிகவும் குறைவாக உள்ளதால் இன்னும் நூறு ஆண்டுகளுக்குள் வாழ முடியாத பகுதியாக மாறிவிடும் என்று ஐநா எச்சரித்துள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் நானாக இருந்தாலும், சுற்றுலாத்துறையில் கடைசி இடத்தில் இருப்பது ஆச்சரியத்திற்குரிய விஷயமாகும்.அழகான நாடாக இருந்தாலும், சரியான போக்குவரத்து வசதிகள் இல்லாததும், நாட்டின் தட்பவெப்ப நிலைகளுமே சுற்றுலா பயணிகளை ஈர்க்காததற்கு காரணம்.