தமிழகத்தை பொறுத்தவரை செஸ் போட்டியில் பல ஆண்டுகளாக அனைவரின் மனம்கவர்ந்தவர் விஸ்வநாதன் ஆனந்த் தான். அதன் பிறகு இப்பொது ட்ரெண்டிங்கில் உள்ள இளம் செஸ் விளையாட்டு வீரர் தான் பிரக்ஞானந்தா.
உலக அளவில் பல செஸ் சாம்பியன்களை வீழ்த்திய பிரக்ஞானந்தா தற்போது இளம் செஸ் சாம்பியன் என்ற படத்தையும் வென்று அசத்தியுள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் 16ம் தேதி உலக அளவில் இருந்து 16 உலக சாம்பியன்கள் பங்கேற்ற போட்டியில் இரண்டவது இடம் பிடித்து அசத்தியுள்ளார் பிரக்ஞானந்தா.
விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியின் ஐந்தாவது சுற்றில் உலக சாம்பியனும் முதல் நிலை செஸ் வீரருமான கார்ல்சனை எதிர்த்து அவர் விளையாடிக் கொண்டிருந்தார். இவர்களுடைய ஆட்டம் டிராவை நோக்கி சென்று கொண்டிருந்த நேரத்தில் கார்ல்சன் தனது 40 வரை moveவை தவறுதலாக நகர்த்த அதை பயன்படுத்தி அவரை தோற்கடித்தார்.
அதன் பிறகு சீன வீரர் ஒருவரையும் தோற்கடித்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய அவர் இந்த போட்டியின் இறுதியில் 2வது இடம் பிடித்து அசத்தினார்.
இந்நிலையில் பல முன்னணி வீரர்களை வீழ்த்தி உலக அளவில் இரண்டாவது இடம் பிடித்துள்ள இந்த இளம் வீரர் பிரக்ஞானந்தாவிற்கு இந்தியாவில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனம் வேலை வழங்க முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீகாந்த் மாதவ் மற்றும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில இந்தியன் ஆயில் மாநில தலைவர் அசோகன் ஆகியோர் அந்த நிறுவனத்தில் இணைவதற்கான ஆர்டரை பிரக்ஞானந்தாவிடம் அளித்தனர்.
தற்போது 16 வயது நிரம்பியுள்ள பிரக்ஞானந்தாவிற்கு 18 வயது ஆனவுடன் அவருடைய கல்வித் தகுதிக்கு ஏற்றாற்போல் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் அவருக்கு வேலை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அலுவலர் அளவிலான பணிக்கு ஊதியம் ஆண்டுக்கு பல லட்சம் ரூபாய் என்பதால் பிரக்ஞானந்தாவிற்கு நல்ல சம்பளம் கிடைக்கவும் வாய்ப்புகள் உள்ளது.