கள்ளகாதலனுக்காக மைனர் சிறுவர்கள் உதவியுடன் கணவரை கொலை செய்ய முயன்ற பெண்ணை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் கோவை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை ஓண்டிபுதூர் பகுதியை சேர்ந்த சேதுராஜாராம்- சவுந்தர்யா தம்பதி
6 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இடையில் கடந்த சில ஆண்டுகளாக குடும்ப தகராறு நிலவி வந்தது.
இந்நிலையில் சவுந்தர்யாவுக்கு ஆம்புலன்ஸ் டிரைவரான குணசேகர் என்பவருடன் பழக்கம் ஏற்பட இது தொடர்பாக கணவன் மனைவி இடையே அடிக்கடி வீட்டில் பிரச்சினை ஏற்பட்டது. இது முற்றி போக சவுந்தர்யா கணவரை கொல்ல தனது கள்ளக்காதலுடன் திட்டமிட்டார்.
இந்நிலையில் நேற்று முன் தினம் வீட்டில் வைத்து குணசேகரன் மற்றும் சவுந்தர்யாவின் 17 வயது சகோதரன் மற்றும் அவரது நண்பர்கள் சேதுராஜாராம் சிங்கினை கழுத்தறுத்து கொல்ல முயன்றுள்ளனர். அப்போது கழுத்தில் காயம் ஏற்பட்ட சேதுராஜாராம் அலறல் சத்தத்தால் அனைவரும் பயத்தில் அங்கிருந்து கிளம்பியுள்ளனர்.
சேதுராஜாராம் அளித்த புகாரின் பேரில் போலீசார் சவுந்தர்யா மற்றும் குணாவை கைது செய்தானர். 4 சிறுவர்களையும் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். சமீபகாலமாக கள்ளக்காதல் தொடர்பாக அரங்கேறி வரும் கொலைகள் தமிழகத்தை அதிர்ச்சிகுள்ளாக்கி வருகின்றன.