TamilSaaga

ஓஹோவென வாழ்ந்த “சரவணன் மீனாட்சி” நடிகர்.. “எம்.ஜி.ஆர்” குடும்பத்தில் பெண் கொடுத்த பெருமை – சிங்கப்பூர் உறவினர்களும் கைவிட நடுத்தெருவில் மனைவி

வானம் எனக்கொரு போதி மரம்.. நாளும் எனக்கது சேதி தரும்.. இது ஒரு பொன்மலை பொழுது. இந்த பாடலை யாராலும் எப்போது மறக்க முடியாது என்றே கூறலாம். கவிப்பேரரசு வைரமுத்துவின் இந்த முதல் வரிகளுக்கு உருவம் கொடுத்தவர் தான் நடிகர் ராஜசேகர். 1980 மற்றும் 90களில் பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம்வந்தவர் அவர். 1960ம் ஆண்டு சென்னையில் பிறந்த இவர் “நிழல்கள்” என்ற அந்த படத்தின் மூலம் தான் அறிமுகமானார். ஒரு நடிகராக மட்டும்மல்லாமல் இயக்குநர், எழுத்தாளர் மற்றும் ஒளிப்பதிவாளராகவும் தமிழ் சினிமாவில் பணியாற்றியுள்ளார்.

சிங்கப்பூர் குடியிருப்பில் சரியாக பொருத்தப்படாத “Heater” : அடுத்தடுத்து இறந்த தாய், தந்தை, மகன்

தாரா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட ராஜசேகர் தம்பதிக்கு பிள்ளைகள் இல்லை, ஒருகாலகட்டத்திற்கு பிறகு பிரபல தொலைக்காட்சி நிறுவனங்களான சன், விஜய் மற்றும் Zeeயில் பல நாடகங்களில் நடித்து வந்தார் ராஜசேகர். ஆனால் நாளடைவில் அவர் உடல் நலம் மோசமடைய கடந்த 2019ம் ஆண்டு சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி செப்டம்பர் 8 2019ம் ஆண்டு அவர் காலமானார். சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பிரபலங்கள் பலரும் அவரது இறப்பு இரங்கல் தெரிவித்தனர்.

இந்நிலையில் அவர் இறப்பதற்கு சில வருடங்களுக்கு முன்பு ராஜசேகர் வடபழனியில் வீடு ஒன்றை வாங்கியுள்ளார். அந்த வீட்டிற்கான பாதி பணத்தை ராஜசேகர் செலுத்திய நிலையில், மீதி பணத்திற்கு வங்கியில் லோன் பெற்றுள்ளார். ஆனால் தற்போது அவரது மறைவுக்கு பின் லோன் தொகையை கட்டாத நிலையில் வங்கி வீட்டிற்கு தொடர்ச்சியாக நோட்டீஸ் அனுப்ப துவங்கியுள்ளது. இதனை அடுத்து தற்போது அந்த வீடு ஏலத்திற்கும் வந்துள்ளது. இந்த இக்கட்டான சூழலில், அந்த வீட்டின் மூலம் வரும் வாடகையை கொண்டு தான், நான் வாழ்க்கையை நடத்தி வருகிறேன். அதுவும் இல்லையென்றால் நான் ஆதரவின்றி தான் நிற்க வேண்டும் என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார் ராஜசேகரின் மனைவி தாரா.

கூட்டம் நிறைந்த சிங்கப்பூர் சாலை.. காட்டுப்பன்றி தாக்கியதில் 15 நிமிடம் ரோட்டில் கிடந்த பெண் – தொடர்ந்து நடந்த அட்டகாசம்!

ஏற்கனவே அவர் உதவி கேட்டு சின்னத்துரை மற்றும் வெளித்துறையின் இயக்குநர் சங்கம் மற்றும் நடிகர் சங்கம் என்று எல்லா இடங்களுக்கும் சென்றபோதும் பலன் கிடைக்கவில்லை. முதலமைச்சரை பார்க்க முயற்சி செய்தும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. ராஜசேகர் அவரது தங்கையை MGR அவர்களின் குடும்பத்தில் தான் கட்டிக்கொடுத்துள்ளார். ஆனால் அவர்களிடமிருந்தும் எந்தவித உதவியும் கிடைப்பதில்லை என்று கூறும் தாரா, சிங்கப்பூர் மற்றும் அரபு நாடுகள் உள்பட பல நாடுகளில் பல சொந்தங்கள் நல்ல வசதியான நிலையில் இருந்தும் அவர்கள் கூட தனக்கு உதவவில்லை என்கிறார் தாரா.

முதல்வரோ அல்லது நடிகர் சங்கமோ தனது நிலையை தயவுகூர்ந்து கண்ணோக்கி உதவிட வேண்டுமென்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ad

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts