TamilSaaga

உறவுகளை காக்க வெளிநாட்டில் வேலை.. 200 தமிழர்கள் பலி : தமிழர்கள் நல ஆணையரகம் வெளியிட்ட அதிர்ச்சி ரிப்போர்ட்

தன்னலம் மறந்து குடும்ப நலனை மட்டுமே உயிர் மூச்சாக கருதி, தாயகத்தை விட்டு வெளிநாடுகளுக்கு சென்று பாடுபடும் தொழிலாளர்கள் பல்லாயிரம் பேர் உண்டு உலக அளவில். இந்நிலையில் அண்டை நாடான இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் செயல்பட்டு வரும் வெளிநாட்டு வாழ் தமிழர்கள் நல ஆணையரகம் ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

அந்த தகவலின் அடிப்படையில் கடந்த 2016ம் ஆண்டு முதல் 2019 ஆண்டு வரை வெளிநாடுகளுக்கு சென்ற தமிழர்களின் 200 பேரின் உடல்கள் தமிழ்நாட்டிற்கு வந்தடைந்துள்ளதாக அதிர்ச்சி தரும் வெளியாகியுள்ளது. 2016 முதல் 17ம் ஆண்டுக்குள் 48 உடல்கள், 2017 – 18 ஆண்டுக்குள் 75 உடல்கள், 2018 – 19 ஆண்டுக்குள் 77 உடல்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இயற்கை மரணம் மற்றும் தற்கொலை செய்துகொண்டவர்கள் உடல்கள் இதில் அடக்கம்.

அதுபோல அமைச்சகம் வெளியிட்ட மற்றொரு தகவலில் கடந்த 2012ம் ஆண்டு தொடங்கி 2019ம் ஆண்டு வரை 7 ஆண்டுகளில் மொத்தமாக 468 தமிழர்கள் பிற நாடுகளில் மீட்கப்பட்டு தாயகம் அழைத்துவரப்பட்டுள்ளதாக தகவல் அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த 2014 – 15ம் ஆண்டில் சுமார் 400க்கும் அதிகமான தமிழர்கள் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த நிகழ்வு குறித்து தனது கருத்துக்களை தெரிவித்த பக்ரைன் நாட்டு தமிழ் மன்றத்தினுடைய தலைவர் “பிற நாடுகளுக்கு வேலை நிமித்தமாக செல்லும் தமிழர்கள் சரியான முகவர்கள் வழியாக செல்லாத காரணத்தால் வேலையிடத்தில் மிகுந்த சிரமங்களுக்கு உள்ளாகிறார்கள்” என்று கூறினார். மேலும் வெளிநாட்டு வேலைக்கு செல்வதற்கு முன்பாக அங்குள்ள தமிழ்சமூகத்தை தொடர்புகொண்ட தேவையான தகவலை பெற்று பிறகு பயணிப்பது நல்லது என்றும் அவர் கூறினார்.

Related posts