TamilSaaga

திருச்சியில் புதிதாய் திறக்கப்பட்டுள்ள பன்னாட்டு விமான முனையம்! மக்களின் மகிழ்ச்சி நிறைந்த வரவேற்பு!

திருச்சிராப்பள்ளியில் புதியதாக திறக்கப்பட்டுள்ள பன்னாட்டு விமான முனையம் 11-06-2024 அன்று முதல் மக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் இருந்து காலை 6.40க்கு வருகை தந்த இண்டிகோ விமானம் தான் இந்த விமான நிலையத்திற்கு முதன்முதலில் வருகை தந்த விமானம் ஆகும். அதே போல் காலை 7.40க்கு பெங்களூரு செல்லும் விமானம் தான் முதன் முதலில் இந்த விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் ஆகும்.

ஏறத்தாழ 104 Immigration Counter-கள் இந்த விமான நிலையத்தில் உள்ளது.Arrival-க்காக 60 Counter-களும் Departure-க்காக 44 Counter-களும் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 75000 சதுர மீட்டரில் உருவாக்கப்பட்டுள்ள இந்த விமான நிலையம் வருடத்திற்கு 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகளைக் கையாளக்கூடியது என இந்த விமான நிலையத்தின் இயக்குனரான P சுப்பிரமணி அவர்கள் தெரிவித்துள்ளார்.

இது தவிர அங்கு வந்த பயணிகளிடம் கேட்கப்பட்டதில், சென்னை துபாய் உள்ளிட பல பன்னாட்டு விமான நிலையங்களைப் போன்றே திருச்சியிலும் உலகத்தரத்தில் இந்த விமான நிலையம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மிகுந்த இட வசதியுடன் சிறப்பாக திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளதால் மிகவும் எளிதாக வந்து செல்ல முடிகிறது எனவும் இனி சிரமமின்றி பன்னாட்டு விமான பயணங்களை நமது திருச்சியிலிருந்தே மேற்கொள்ள முடியும் எனவும் மகிழ்ச்சி தெரிவித்தனர். 

தமிழ்நாட்டின் பல சிறப்புகளை விளக்கும் விதமாக பல காட்சியமைப்புகளும் அமைக்கப்பட்டுள்ளதால் மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் அதனைக் கண்டுகளிக்கின்றனர். மேலும் 1000 கார்கள் வரை நிறுத்தக்கூடிய அளவில் மிக பெரிய பார்க்கிங், 19 லக்கேஜ் X-Ray சிஸ்டம், 10 Aerobridges மற்றும் 5 Baggage Carousel-கள் போன்றவை இந்த விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளன. 

1112 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த விமான நிலையத்தின் கட்டுமானப்பணிகள் 2019-ல் பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் துவங்கிவைக்கப்பட்டது. 

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க! 

சிங்கப்பூரில் அன்றாடம் நிகழும் புதுப்புது செய்திகளுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து தமிழ் சாகா சிங்கப்பூர் பக்கத்தில் இணைந்திடுங்கள்!

Related posts