தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பள்ளி மாணவர்களிடையே நடக்கும் வன்முறையும், பொதுவெளியால் அவர்கள் செய்யும் அருவருக்கத்தக்க சில செயல்களும் பலரை முகம் சுளிக்க வைத்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு ஓடும் அரசு பேருந்தில் மாணவிகள் சிலர் ஒன்றாக பீர் குடித்த விஷயம் வைரலானது.
இந்நிலையில் மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் நடந்த ஒரு சம்பவம் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. லாக் டவுன் இப்பொது இல்லாத காரணத்தால் பேருந்து நிலையங்கள் தற்போது முன்பை போல சற்று நெரிசலுடன் தான் காணப்படுகிறது.
அதேபோல சம்பத்தன்றும் பெரியார் பேருந்து நிலையத்தில் பலர் பேருந்திற்காக காத்திருந்த நிலையில் அங்கு குழுமியிருந்த 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் தீடிரென்று இரு குழுக்களாக பிறந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மாறி மாறி ஒருவரை ஒருவர் தகாத வார்த்தைகளாலும் திட்டிக்கொண்டனர், இறுதியில் அந்த வாக்குவாதம் முற்ற அது கைகலப்பில் முடிந்தது. முடியை பிடித்து அடித்தும், எட்டி உதைத்தும் ஒருவரை மாணவிகள் சரமாரியாக தாக்கிக்கொண்டனர்.
மக்கள் பலர் அருகில் குடியிருப்பதை கூட பொருட்படுத்தாமல் பள்ளி மாணவிகள் தாக்கிக்கொண்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சம்மந்தப்பட்ட பள்ளியின் தலைமையரிசியார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சண்டையில் ஈடுபட மாணவிகள் யார் யார் என்பதை கண்டறிந்து அவர்களுக்கு counseling வழங்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.