ஓமனில் மின்பராமரிப்பு பணியிடங்கள்: உடனே விண்ணப்பிக்க அழைப்பு!
சென்னை, ஏப்ரல் 03, 2025: வெளிநாட்டில் வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு வந்துள்ளது. ஓமன் (Oman) நாட்டில் மின்பராமரிப்பு (Electrical Maintenance) பணிக்காக தகுதியான நபர்களை நியமிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வேலைவாய்ப்பு குறித்து வெளியிடப்பட்டுள்ள விவரங்கள் பின்வருமாறு:
பணி: மின்பராமரிப்பு (Electrical Maintenance)
கல்வித் தகுதி: விண்ணப்பதாரர்கள் DEEE (Diploma in Electrical and Electronics Engineering) அல்லது ITI (Industrial Training Institute) படிப்பை முடித்திருக்க வேண்டும்.
அனுபவம்: சம்பந்தப்பட்ட துறையில் 2 முதல் 3 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் அவசியம்.
வயது வரம்பு: விண்ணப்பிப்பவர்களின் வயது 22 முதல் 26 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்களுக்கு மாதம் ரூ.36,000 முதல் ரூ.40,000 வரை ஊதியம் வழங்கப்படும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: ஏப்ரல் 10, 2025
தகுதியும், ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது புதுப்பிக்கப்பட்ட விண்ணப்பம் (Resume/CV), பாஸ்போர்ட் நகல் மற்றும் சமீபத்திய புகைப்படம் ஆகியவற்றை ovemclnm@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும் இந்த வேலைவாய்ப்பு தொடர்பான கூடுதல் தகவல்களைப் பெற விரும்புவோர் அலுவலகத்தின் வாட்ஸ்அப் எண்ணான 9566239685-ஐ தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, வெளிநாட்டில் மின்பராமரிப்பு துறையில் பணியாற்ற விரும்பும் தகுதி வாய்ந்த இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி, விரைவில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி நெருங்கி வருவதால், தாமதிக்காமல் உடனடியாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கூடுதல் விவரங்களுக்கு அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவன வலைதளம்: www.omcmanpower.tn.gov.in, தொலைபேசி எண் 044-22502267 மற்றும் Whatsapp எண் 9566239685 வாயிலாக அறிந்துகொள்ளலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகவரி :
அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் (தமிழ்நாடு அரசு நிறுவனம்)
ஒருங்கினைந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகம்
42, ஆலந்தூர் ரோடு, திரு.வி.க. தொழிற்பேட்டை,
கிண்டி சென்னை -32