திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டானில் அமைந்துள்ள சிப்காட் தொழில்வளாகத்தில் ரூ.3,800 கோடி முதலீட்டில் டாடா பவர் சோலார் லிமிடெட் நிறுவனம் தன் உற்பத்தி செயல்பாட்டைத் தொடங்கியுள்ளது.
இந்த புதிய திட்டத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிப்ரவரி 6ஆம் தேதி, வியாழக்கிழமையன்று தொடங்கி வைத்தார். முக்கியமான இந்த திட்டம் தமிழகத்தின் தொழில்துறை வளர்ச்சிக்கும் புதுமையான ஆற்றல் உற்பத்திக்கும் முக்கிய பங்களிப்பை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரூ.3,800 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்ட இந்த தொழிற்சாலை மூலம் ஏறக்குறைய 2,800 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.
முதல்வர் ஸ்டாலின் தென் மாவட்ட மக்களின் வேலைவாய்ப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன், இருநாள் சுற்றுப்பயணமாக திருநெல்வேலி வந்துள்ளார்.
தென்மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் கங்கைகொண்டானில் உலகத் தரம் வாய்ந்த சூரிய மின்தகடு மற்றும் மாடுலர் தொழிற்சாலை வணிக உற்பத்திக்குத் தயார்நிலையில் உள்ளது. இது தமிழகத்தின் தொழில்துறை வளர்ச்சிக்கும் மின்னுறுப் பகுதியிலும் புதிய மைல்கல்லாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.
இந்த தொழிற்சாலை, அதிகளவில் பெண்களை வேலைவாய்ப்பில் ஈடுபடுத்தி, பெண்கள் தலைமையிலான முன்னணி சூரிய மின்சக்தித் தகடு உற்பத்தி ஆலையாக திகழ்கிறது.
ரூ.3,800 கோடி முதலீட்டில் உருவாகியுள்ள இந்த புதிய தொழிற்சாலை, வேலைவாய்ப்பில் பெண்களின் பங்கை அதிகரித்து, தென் தமிழகத்தில் தொழில்துறை வளர்ச்சியுடன் சமூக மேம்பாட்டிற்கும் வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல்வர் மு.க. ஸ்டாலினின் தலைமையிலான இந்தத் திட்டம், பெண்கள் ஆற்றலுக்கு மரியாதையையும் தொழில்துறையில் அவர்களின் பங்களிப்பை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
முதலீட்டின் மூலம் திருநெல்வேலி பகுதியில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் எனவும் இது மாநிலத்தின் வளர்ச்சியை மெருகேற்றும் பெரும் திட்டமாக பார்க்கப்படுகிறது.
ராமேசுவரம்: புதிய பாம்பன் ரெயில் பாலத்தை திறக்கிறார் – பிரதமர் நரேந்திர மோடி