சிறந்த தொழில்நுட்பங்களுடன் மற்றும் உயர்தரமான புகைப்படங்களைப் பிடிக்கும் செயற்கைக்கோள், சிங்கப்பூர் நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தால் (NTU) உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள் 2025-ல் விண்ணில் செல்ல தயாராகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்வெளியில் பெரும்பாலான செயற்கைக்கோள்கள் 500 கி.மீ முதல் 800 கி.மீ தொலைவில் தான் நிறுவப்படும். ஆனால் 1.3 மீட்டர் உயரம் கொண்ட இந்த புதிய செயற்கைக்கோள் – “எக்ஸ்ட்ரீம்லி லோ எர்த் இமேஜிங் டெக்னாலஜி எக்ஸ்ப்ளோரர்” (Elite) – பூமியிலிருந்து வெறும் 250 கி.மீ உயரத்தில் மட்டுமே பறக்கும் திறன் கொண்டுள்ளது.
பொதுவாக இந்த அளவு தாழ்வான பகுதியில் பல வகையான வாயுக்கள் பூமியை சூழ்ந்திருக்கும். இவை செயற்கைக்கோள் போன்ற இயந்திரங்களை பழுதாக்கக்கூடியதாக இருக்கும். அதனால் தான் பூமியின் தாழ்வான பகுதிகளில் பல செயற்கைக் கோள்கள் நிறுவப்படுவதில்லை. இதில் இருந்து Elite-ஐப் பாதுகாக்க NTU Temasek ஆய்வகம் மிகவும் மெல்லிய மற்றும் Transparent-ஆன சிலிக்கான் Layer அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த தாழ்வான பகுதியில் பூமியின் தொடர்ச்சியான ஈர்ப்பு விசை செயல்படுவதால் அது சில நாட்களில் செயற்கைக்கோளை தனது பாதையிலிருந்து விலகச்செய்து பூமியின் பாதைக்கு இழுத்து விடும். மேலும் அதிகரித்து வரும் சூரியப்புயல் மற்றும் அதன் தாக்கம் செயற்கைக்கோளில் உள்ள நுணுக்கமான பாகங்களை செயலிழக்கச் செய்யும். இது போன்ற பிரச்சனைகளை தவிர்க்கவே இதில் novel and fuel-efficient engine பொருத்தப்பட்டுள்ளது இதனை ALIENA நிறுவனம் உருவாக்குகிறது.
2011 முதல் இன்று வரை சிங்கப்பூர் 30 க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியுள்ளது. அவை அனைத்தையும் விட Elite தான் மிகவும் நுணுக்கமான முறையில் தயாரிக்கப்பட்டு மிக தாழ்வான பகுதியில் நிறுவப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செயற்கைகோள் ஆராய்ச்சிக்காக 1.5 வருடங்கள் வரை விண்ணில் பறக்கப்போவதாக ஆராய்ச்சிக் குழுவுவினர் தெரிவித்துள்ளனர்.
பூமிக்குப் மிக நெருக்கமாக நிறுவப்படுவதால், இந்த செயற்கைக்கோள் நாட்டின் வேளாண் செயல்பாடுகள் மற்றும் சுரங்க வேலைகள் போன்றவற்றின் உயர்தர படங்களை சிறிய Camera Optics கொண்டே பிடிக்க முடியும். இதற்காக, இந்த செயற்கைக்கோளில் சிங்கப்பூரிலேயே முதன்முதலில் வடிவமைக்கப்பட்ட Space Camera பொருத்தப்படும். 50 செ.மீ வரை அளவுள்ள பொருட்களையும் துல்லியமாக இதனால் படம் பிடிக்க முடியும். Elite இல் பொறுத்தப்படவுள்ள Space Camera, சிங்கப்பூரில் உள்ள தொழில்நுட்ப நிறுவனம் LightHaus Photonics ஆல் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த செயற்கைக்கோள் நிறுவப்படுவதால், தகவல் தொடர்பும் சீராக இருக்கும். எந்தவிதமான தகவல் தாமதமும் ஏற்படாமல் இருக்கும்.
Elite என்பது NTU, Aliena, LightHaus Photonics, NUS Temasek Laboratories மற்றும் ST Engineering Satellite Systems ஆகிய நிறுவனங்களின் கூட்டு முயற்சியால் உருவாகிவரும் செயற்கைக்கோள் ஆகும்.
180 கிலோ எடை கொண்ட இதன் மாதிரி சிங்கப்பூரின் அதிபர் தர்மன் சண்முகரத்னம் அவர்களால் பார்வையிடப்பட்டது. இதன் சோதனைகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்ட பின்னர் செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டு 2025-ல் விண்ணில் ஏவப்படும் என செயற்கைக்கோள் ஆராய்ச்சி மையத்தின் செயல் இயக்குனரான Lim Wee Seng தெரிவித்தார்.