ஒவ்வொரு முறையும் ஒலிம்பிக் போட்டிகளில் விளையாட்டு வீரர்களுக்கு Condom வழங்கப்பட்டுவது ஓர் வழக்கமாக கடைபிடிக்கப்படுகிறது.
வரும் ஜீலை.23 ஆம் தேதி ஜப்பான் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி நடைபெற இருக்கிறது. இந்த விளையாட்டு போட்டியில் வீரர்களுக்கு காண்டம் தருவது நிறுத்தப்பட்டுள்ளது. ஏன் என தெரிந்துகொள்வதற்கு முன்பாக எதற்கு என முதலில் தெரிந்துகொள்ளலாம்.
காண்டம் வழங்குவது எதற்கு?
1988 ஆம் ஆண்டு முதல் ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறும் வீரர்களுக்கு காண்டம்கள் பாக்கெட் பாக்கெட்டாக வாரி வாழங்கப்படுகிறது. இது ஒரு வகையில் நல்ல விடயத்துக்கு தான் ஏனெனில் எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு அனைவருக்கும் ஏற்படும் என்று கூறப்படுகிறது.
ஒலிம்பிக் தடகள போட்டிகளில் பங்குபெறும் விரார்கள் ஆஜானுபாகுவான உடல் கட்டமைப்பை பெற்றவர்கள். அவர்கள் தங்களுடைய உடல் மற்றும் மன அழுத்தத்தை குறைத்துக்கொள்ள உடலுறவு உதவுகிறது.
தடகள மற்றும் பளு தூக்கும் வீரர்கள் அதிகளவில் காண்டம்களை பயன்படுத்துவதாக விவரங்கள் சொல்லுகின்றன.
எத்தனை காண்டம்?
2008 ஆம் ஆண்டு பெய்ஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 400 அறைகளில் தங்கியிருந்த விளையாட்டு வீரர்கள் சுமார் 4 லட்சம் காண்டம்களை உபயோகப்படுத்தி உள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
அது போல 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் சுமார் 4 லட்சத்து 50 ஆயிரம் காண்டம் பாக்கெட்டுக்கள் உபயோகப்படுத்தி உள்ளதாக விவரங்கள் கூறுகின்றன.
2018 ல் நடந்த ஒலிம்பிக் போட்டியில் சுமார் 2000 வீரர்களுக்கு 1 லட்சத்து 10 ஆயிரம் காண்டம் வழங்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு நபருக்கு 55 காண்டம் என்ற அளவில் வழங்கப்பட்டுள்ளது.
இந்த முறை No Condom
கொரோனா தொற்று அதிகம் பரவிவரும் கால சூழலில் ஒலிம்பிக் நடக்க இருப்பதால் இந்தாண்டு காண்டம் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக வீரர்கள் ஊருக்கு திரும்பும் போது HIV விழிப்புணர்வுக்காக காண்டம் கொடுத்து வழியனுப்பி வைக்கப்படுவார்கள் என் அறிவிக்கப்பட்டுள்ளது.