பேஸ்புக் உள்ளிட்ட சமூக தளங்களை நீங்கள் அதிகம் உபயோகிப்பவர்கள் என்றால், இந்த செய்தியை நீங்கள் ஒருமுறையாவது பார்த்திருக்கலாம். அப்படி நீங்கள் பார்க்காமல் விட்டிருந்தாலும், உங்கள் timline-ல் நிச்சயம் இந்த செய்தி இடம் பெற்றிருந்திருக்கும். அவ்வளவு வைரலாக பரவிய செய்தி இது.
இதில், சுவாரஸ்யம் என்னவெனில், இந்தியாவின் முன்னணி செய்தி நிறுவனங்களில் ஒன்றான india.com உள்ளிட்ட சில ஊடகங்கள் கூட இந்த செய்தியை வெளியிட்டன.
அப்படி என்ன செய்தி? “அமெரிக்காவில் ஒரு நீச்சல் குளத்தில் குளித்த 16 பெண்கள், அதே நீச்சல் குளத்தில் குளித்த ஒரு இளைஞன் வெளியிட்ட விந்துக்கள் காரணமாக முறையில் கர்ப்பம் தரித்தார்கள்” என்பதே அந்த செய்தி.
“படிக்காதவன்” படத்தில்,சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காரின் மீது ஹாயாக படுத்துக் கொண்டு செய்தித் தாளில் நியூஸ் படித்துக் கொண்டிருப்பார். அப்போது, “ஆட்டு மனித உருவத்தில் குழந்தை பிறந்தது” என்ற ஒரு செய்தியை படித்துவிட்டு, ஜெர்க்காகி, அது எப்படி ஆடு கூட…….!!? என்று ரக ரகமாக யோசித்துக் கொண்டிருப்பார்.
அதுபோல, இந்த செய்தியை படித்தவர்களும் நிச்சயம் ஜெர்க் ஆகியிருப்பார்கள். “அதெப்படி நீச்சல் குளத்தில் குளிச்சதனால கர்ப்பம் ஆகியிருக்க முடியும்?” என்று.
முதலில் செய்தியின் முழு தகவலையும் படித்துவிடலாம்.
அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் நீச்சல் குளம் ஒன்றில் இரவு விருந்து நடைபெற்றது. அப்போது, Tommy Coulter எனும் இளைஞன், தனது நண்பர்களுடன் நீச்சல் குளத்தில் இருந்த போது, ejaculate செய்து தனது விந்தணுவை வெளியிட்டுள்ளார். பிறகு, சிறிது நேரத்தில் அதே நீச்சல் குளத்தில் 16 இளம் பெண்கள் குளித்துள்ளனர்.
பிறகு, சில நாட்கள் கழித்து அவர்கள் 16 பேரும் கருவுற்றதாக கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து Tallahassee Memorial Healthcare மருத்துவமனையின் டாக்டர். John Suzukima என்பவர் கூறுகையில், “அந்த இளைஞருக்கு ஸ்பெர்மாஃபோர்டிஸ் எனப்படும் ஒரு அரிய மருத்துவ நிலை உள்ளது, இது அவரது விந்தணுவை வழக்கத்திற்கு மாறாக வலிமையாக்குகிறது” என்று கூறியதாகவும் செய்தி வெளியிடப்பட்டது.
இவரது விந்தணுக்களின் வீரியம், வழக்கமான ஆண்களை விட 1000 மடங்கு வீரியமாக இருக்கும் என்று கூறியதாக செய்திகள் பல்வேறு ஊடகங்களில் வெளியிடப்பட்டன. ஆனால், நமது தமிழ் சாகாவின் “Fact Check” இந்த சுவராஸ்ய செய்தியின் பின்னணி குறித்து ஆராய்ந்தது. படிப்பதற்கு சுவாரஸ்யமாக இருந்தாலும், செய்தி உண்மையா? என்ற கேள்வி எழுந்தது.
ஆனால், உண்மையின் இந்த செய்தி, மிக அழகாக புனையப்பட்ட ஒரு கட்டுக்கதையே. இதுகுறித்து நாம் சில மருத்துவ experts-களிடமும், மகேப்பேறு ஆராய்ச்சியாளர்கள் சிலரிடமும் பேசினோம். அவர்களிடம் இந்த செய்தியை கொண்டுச் சென்ற போதே.. ‘இது பொய்’ என்று சொல்லிவிட்டனர். தண்ணீரில் விந்தணு கலந்து, அதில் ஒரு பெண் குளித்து அதன் மூலம் ஒரு பெண் தரிக்கிறாள் என்று, உலகில் இதுவரை எந்த ஆய்வும் சொல்லவில்லை. மருத்துவ உலகில் இப்படியொரு செய்தி என்பது சிரிப்பதற்கு மட்டுமே” என்று சிம்பிளாக முடித்துவிட்டனர்.