சிங்கப்பூரில் இருக்கும் தமிழர்கள் சாதாரணமாக பேசப்பட்டாலே பலருக்கும் பெருமை தொற்றிக்கொள்ளும். அதே போல தான் தன்னுடைய 60 வயதில் சாதனை புத்தங்களை தொடர்ந்து தன்னுடைய பெயரை பதிவிட்டு வருகிறார் தமிழகத்தில் இருந்து சிங்கப்பூர் குடிபெயர்ந்து வசித்து வரும் விஜயா மோகன்.
30 வருடத்துக்கு முன்னர் சிங்கப்பூர் வந்தவர். அப்போதைய காலத்தில் டீச்சராக இருந்தவருக்கு தன்னுடைய பொழுதுப்போக்கிற்காக ரங்கோலியை போட்டு வந்து இருக்கிறார். சிறு வயதில் இருந்தே ரங்கோலி மீது அவருக்கு அதிக ஆசை இருந்ததாக கூறுகிறார்.
திருமணம் முடிந்து சிங்கப்பூர் வந்து ரங்கோலியின் மீது தன்னுடைய ஆர்வத்தினை அதிகரித்து வந்து இருக்கிறார். ஆனால் இங்கு தான் அவருக்கு சிலர் தாங்கள் செய்தவை அழிந்து விடும். வீட்டுக்கு எடுத்து செல்ல ஆசை இருப்பதாக கூறியதை கேட்டு யோசிக்க தொடங்கி இருக்கிறார்.
Sand art போன்ற புது கலைகளை தொடங்கி இருக்கிறார். இதை தொடர்ந்து தன்னுடைய ரங்கோலியை விதவிதமான பொருட்களால் செய்ய தொடங்கி அதை ப்ரேம் செய்ய தொடங்கி இருக்கிறார். வளையல்கள் முதல் ஸ்டோன்ஸ் வரை ஏகப்பட்ட விஷயங்களை தன்னுடைய ரங்கோலி டிசைனில் சேர்த்து ப்ரேம் செய்ய விஜயாவின் இந்த முயற்சி பலரிடத்திலும் ஆச்சரியத்தினை கொடுத்து இருக்கிறது.
லண்டனில் மூன்று பெண்கள் செய்து தானியங்கள் மற்றும் பழங்களை வைத்து 30 அடியில் செய்த ரங்கோலி தான் கின்னஸ் சாதனையாக இருந்ததை விஜயா தெரிந்து கொண்டு இருக்கிறார். உடனே தான் கின்னஸ் சாதனை செய்யலாம் என்ற ஐடியாவில் இறங்கி இருக்கிறார். தனி ஆளாக 14 மீட்டருக்கும் அதிகமான ரங்கோலியை 7 மணி நேரத்தில் 2003 வருடமே செய்து கின்னஸ் சாதனை படைத்தவர்.
மழைக்காலத்தில் கூட அழியாத All weather ரங்கோலி செய்து வித்தியாசம் காட்டியவர். சிங்கப்பூரில் பாரம்பரிய கலைக்கு அதிகமான ஆதரவு கிடைக்கும் எனத் தெரிவித்து இருக்கிறார். சிங்காரங்கோலி என்றால் பாதி சிங்கப்பூர் மக்களுக்கு தெரியும் என்கிறார்.
மிகப்பிரபலமாக சிங்கேபரேட்டில் நான்கு முறைக்கு மேல் விருது வாங்கி இருப்பதாக தெரிவிக்கிறார். ஒவ்வொரு முறை சிங்கப்பூர் புக் ஆப் ரெக்கார்ட்ஸில் சாதனை செய்யும் போது பல்வேறு நிறுவனங்கள் வந்து விருது கொடுத்ததாக கூறுகிறார்.
இவரை பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள http://www.singarangoli.com என்ற இணையத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் பெற எங்களது முகநூல் பக்கத்தை Follow பண்ணுங்க”