உலகளவில் மிகவும் சிறந்த கடல் துறை நிலையம் என்ற பெயரை எட்டாவது முறையாக பெறுகிறது சிங்கப்பூர் என்பதை பெருமையுடன் தெரிவிக்கப்பட்டுள்ளது. Xinhua-Baltic எனப்படும் அனைத்துலக கப்பல் நிலையம் மேம்பாட்டு குறியீடு வெளியிட்ட பட்டியலில் சிங்கப்பூர் மீண்டும் முதல் இடம் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடல் துறை மற்றும் துறைமுக துணை ஆணையம் இந்த தகவலை தற்போது உறுதிப்படுத்தியுள்ளது. வலுவான தலைமை உள்கட்டமைப்பு, அதற்கு ஆதரவான அரசாங்க கொள்கை, விரிவான கடற்கரை சார்ந்த சேவைகள் ஆகியவற்றின் அடிப்படையில் சிங்கப்பூர் முதலிடம் வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.
சுமார் 43 நாடுகள் இந்த பட்டியலில் உள்ளது என்பது நினைவுகூரத்தக்கது. மேலும் சிங்கப்பூர் இந்த பட்டத்தை 8வது முறையாக பெறுகின்றது.
கடல்துறை உள்ளிட்ட பல விஷயங்களில் சிங்கப்பூர் முன்னணி வகித்து வருகின்றது.