TamilSaaga

சிங்கப்பூரில் PR… ஆசை வார்த்தை காட்டி 10 ஆண்களுடன் காதல் லீலை… பெண்ணின் வயது எவ்வளவு தெரியுமா?

சிங்கப்பூரில் பல ஆண்களை காதல் வலையில் விழ வைத்து பணமோசடியில் ஈடுபட்ட பெண் தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளார். இவருக்கு திருமணம் ஆகி தற்பொழுது 49 வயது ஆகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இவர் பத்துக்கு மேற்பட்ட ஆண்களிடம் ஆசை வார்த்தை காட்டி காதல் நாடகம் ஆடியது தெரியவந்துள்ளது அதிலும் குறிப்பாக மூன்று ஆண்களிடமிருந்து பெருமளவு பணம் பெற்றதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதில் ஒரு ஆண் அவரது பெற்றோரை ஏமாற்றி இதுவரை சேர்த்து வைத்திருந்த சேமிப்புகள் முழுவதையும் இந்த பெண்ணிற்காக திருடியதாக தெரியவந்துள்ளது. இதுவரை அந்த பெண் மொத்தம் 880000 சிங்கப்பூர் டாலர் பணத்தினை பல்வேறு ஆண்களிடம் இருந்து ஏமாற்றியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் PR பெறுவதற்கு தன்னால் உதவ முடியும் என்று ஆசை வார்த்தை கூறி ஆண்களை தன் பக்கம் ஈர்ப்பதை இவர் வழக்கமாக வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இவர் மீது விசாரணை நடந்து கொண்டிருந்த பொழுது கூட ஒரு ஆணை ஏமாற்றி 338600 சிங்கப்பூர் டாலர் பணத்தினை ஏமாற்றி பெற்றதாக தெரியவந்துள்ளது. இதனை அடுத்து இந்த பெண்ணை பற்றி உண்மை தெரிந்ததை ஒட்டி அவர் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த பெண்மணி தொடர்பான குற்றம் நிரூபிக்கப்பட்ட பின் தண்டனை மற்றொரு நாள் வழங்கப்படும் என நீதிபதி வழக்கை ஒத்தி வைத்துள்ளார்.

Related posts