சமூக அந்தஸ்த்தை காக்க பலரும் ஆபிஸில் உட்கார்ந்து வேலை செய்வதவையே பெருமையாக கருதுகின்றனர். ஆனால் சிங்கப்பூரை சேர்ந்த பெண் ஒருவர் தனது தேவைகள் அதிகரித்ததை அடுத்து, அவர் மனம் விரும்பிய வழியில் நடக்க ஆபிஸ் வேலையை உதறி தள்ளிவிட்டு க்ளினீங் வேலையில் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
லியு என்ற பெண் வெய்போவில் தனது வாழ்க்கை கதையை பகிர்ந்து இருக்கிறார். அதில், இவர் ஆபிஸில் வேலை செய்து வந்தார். இருந்தும் அவர் பொருளாதாரத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லையாம். தாயிற்கு ஆஸ்பத்திரி செலவு, மகனின் படிப்பு செலவு என ஏகப்பட்ட செலவுகள் வரிசைகட்டி நின்றன. இதனால் தன் வேலையை ராஜினாமா செய்து விட்டு க்ளினீங் வேலையில் சேர்கிறார்.
ஆனால் இதை தனது குடும்பத்திற்கு சொல்லவில்லையாம். வொயிட் காலர் வேலையில் இருந்து ப்ளூ காலர் வேலைக்கு செல்ல துணிந்தவரால் அதை தனது குடும்பத்தினரிடமோ, நண்பர்களிடமோ சொல்லவில்லையாம்.
ஆறுமாதமாக க்ளினீங்கில் வேலையில் இருந்து லியு அதை தனது குடும்பத்தினரிடம் வாயே திறக்கவில்லையாம். தான் க்ளினீராக இருப்பது அவர்களுக்கு அவமானமாக இருக்கும் என கருதினாராம். ஆனால் இதை அவர் தந்தையிடம் லியு கூறியபோது, திட்டுவார் என நினைத்தவருக்கு ஆச்சரியமாக அவர் ஆதரவாக இருந்தாராம்.
ஆபிஸ் வேலையில் இருக்கும் போது கிடைக்காத பொருளாதார மாற்றம் லியுவின் க்ளினீங் வேலையில் கிடைத்ததாம். இரண்டு வீடுகள் மற்றும் இரண்டு கார் வாங்கும் அளவுக்கு அவரின் வருமானம் அதிகரித்துள்ளதாக கூறியிருக்கிறார்.
அவரின் எதிர்கால திட்டத்திற்கு இந்த வேலை பெரிய உதவியாக இருப்பதால், இந்த வேலையை விடும் எண்ணமே இல்லை எனக் கூறுகிறார். மேலும், லியு ஒருநாளைக்கு 17 மணிநேரம் வேலை பார்ப்பாராம். காலை 7 மணிக்கு தொடங்கி அதிகாலை 2 மணி வரை வேலை செய்வாராம். இதில் அவருக்கு கிடைக்கும் பாராட்டுகள் மேலும் ஊக்கம் கொடுப்பதாக தனது வீடியோவில் குறிப்பிட்டு இருக்கிறார்.