வீட்டின் கஷ்டத்தினை சரி செய்ய என்ன வேலை கொடுத்தாலும் செய்யலாம் என்ற நினைப்பில் தான் பல இளைஞர்களும் சிங்கப்பூர் விமானம் ஏறி விடுகின்றனர். அவர்களின் வலிமையை மீறி ஏகப்பட்ட கஷ்டத்தினை பொறுத்து கொண்டு வேலை செய்து வருகின்றனர். ஒரு சிலர் அவர்களுக்கு தெரிந்த துறையில் வேலைக்கு வந்து விட்டாலும், பெரும்பாலானவர்கள் அவர்களுக்கு தெரியாத துறையில் சம்பளத்துக்காக வந்து வேலை செய்து கஷ்டப்பட்டு கொண்டு தான் இருக்கின்றனர்.
ஒரு சிலருக்கு இங்கிருக்கும் வாழ்க்கையை பழகி கொண்டு கோர்ஸ்களை படித்து முன்னேறிக்கொண்டே இருப்பர். சிலருக்கு என்ன செய்வது என்றே தெரியாமல் தொடர்ந்து வேலையை செய்து சம்பளத்தினை வாங்குவது என்ற ரீதியில் தான் இருப்பார்கள். நீங்களும் இந்த லிஸ்ட்டில் இருந்தால் இல்லை சிங்கப்பூரில் வேலை தேடுகிறீர்கள் என்றால் இந்த பதிவினை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
இதையும் படிங்க: சிங்கப்பூர் வேலைக்கு செல்ல செலவே இல்லாமல் Free Visa… இந்த வழில போனா ஏமாற மாட்டீங்க… வாழ்க்கையும் கியாரண்டி தான்! Tips & Tricks
ஏகப்பட்ட லட்சத்தில் செலவு செய்து சிங்கப்பூர் வேலைக்கு வர நினைக்கும் உங்களுக்கு ஒரு பெரிய நிம்மதியை தான் இந்த துறை வேலைகள் கொடுக்கும். கண்டிப்பாக இதில் ஏஜென்ட் லட்சத்தில் கட்டணமாக கேட்பார்கள். 3 லட்சம் வரை கட்டணம் கேட்கப்படுவதாக தற்போதைய நிலவரப்படி கூறப்படுகிறது. அப்படி என்னப்பா துறைனு கேட்குறீங்களா? வெயிட் வெயிட். PSA என்றால் Port of Singapore Authority. இந்த துறைகளுக்கு வேலைகள் எல்லாம் போர்ட்டில் தான் இருக்கும். இரண்டு வகையான வேலைகளுக்கு வெளிநாட்டில் இருந்து வேலைக்கு ஆட்களை இறக்குகிறார்கள்.
இந்த பதிவில் போர்ட்டில் டிரைவர் வேலைக்கு வர என்னென்ன செய்யலாம்?
- முதலில் உங்களிடம் ஹெவி லைசன்ஸ் இருக்க வேண்டும். சாதாரண லைசன்ஸாக இருக்க கூடாது. பேட்ச் வைத்திருந்தாலும் போதுமானது.
- முக்கியமாக ஆங்கிலம் பேசுவதை புரிந்து கொள்ள வேண்டும். சமாளிக்கும் அளவில் பேசவும் செய்ய வேண்டும்.
அதிகப்பட்சமாக சம்பளமாக 1300 சிங்கப்பூர் டாலர்கள் வரை கொடுக்கப்படும். இதில் சிலருக்கு கூடவோ, குறையவோ செய்யலாம். 12 மணி நேர வேலைகள் இருக்கும். வார ஒருநாள் அல்லது இரண்டு நாட்கள் கூட விடுமுறை கிடைக்கும்.
இதையும் படிங்க: ஏஜென்ட்டிடம் லட்சங்கள் கொடுக்க பயமா இருக்கா? சிங்கப்பூர் கம்பெனிக்கு நேரடியாக அப்ளே செய்ய முடியுமா? இத படிங்க செம வேலையை பிடிங்க!
முதலில் 3 மாதம் பயிற்சி கொடுக்கப்படும். அப்போது உங்கள் சம்பளத்துடன் தங்குமிடம் கொடுக்கப்படும். அதற்கு பிடித்தம் இருக்கும். 3 மாதத்திற்கு பின்னர் இதில் பிடித்தம் செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. கல்வி தகுதி என்பது இதில் பெரிதாக கூறிப்பிடப்படவில்லை. இந்த வேலைகளில் சிங்கப்பூர் செல்பவர்கள் துறைமுகத்தினை விட்டு வெளியில் வண்டியை ஓட்டக்கூடாது.