விமானத்தில் பயணம் செய்யும் போது சக பயணிகளுடன் நட்பை உருவாக்க உதவும் ‘விங்கல்’ (Wingle) என்ற புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த செயலி, இணைய சேவை இல்லாமலேயே சக பயணிகளுடன் உரையாட வகை செய்கிறது.
ஆசியாவில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த செயலி, தற்போது சிங்கப்பூரிலும் கால் பதித்துள்ளது. விமானத்தில் சும்மா இருக்கும் பயணிகளுக்கு இது பேருதவியாக இருக்கும் என்று செயலி தயாரித்த நிறுவனம் நம்புகிறது.
செயலியின் சிறப்பு அம்சங்கள்:
இணைய சேவை இல்லாமலேயே சக பயணிகளுடன் உரையாடலாம்.
விமான நிலையங்களில் உள்ள ஓய்விடங்களை முன்பதிவு செய்யலாம்.
விமானத்தில் ஐந்து வரிசை தள்ளியிருப்பவர்களுடனும் செயலி மூலம் பேசிப் பழகலாம்.
செயலி உருவான விதம்:
தெம்பனிஸ்ல புது டிரெண்டு: ஒரு ஏசி-ல ஏழு கட்டடங்கள்! சிங்கப்பூரின் முதல் பசுமை முயற்சி!!
திரு மெரினோ மற்றும் திரு போல் குவின்டானா ஆகியோரால் 2020ஆம் ஆண்டு இந்த செயலி உருவாக்கப்பட்டது. அடிக்கடி விமானத்தில் பயணம் செய்யும் அவர்கள், பயணிகளின் வசதிக்காக இந்த செயலியை உருவாக்கியுள்ளனர்.
சிங்கப்பூரில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் சேவை வழங்க தொடங்கிய இந்த செயலியை இதுவரை 20,000க்கும் அதிகமான பயணிகள் பயன்படுத்தியுள்ளனர். விமானப் பயணிகளின் நேரத்தை பயனுள்ளதாக மாற்றும் ஒரு புதுமையான செயலியாக ‘விங்கல்’ இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.