TamilSaaga

டெஸ்ட் அடிக்க லட்சக்கணக்கில் பணத்தை அழிச்சது போதும்.. சிங்கப்பூரில் டெஸ்ட் அடிக்க வெறும் 80,000 ரூபாய் மட்டுமே.. நான்கே நாட்களில் Certificate!

சிங்கப்பூரில் தான் இனி டெஸ்ட் என பலரிடையே பேச்சுக்கள அடிப்பட துவங்கி இருக்கும் நிலையில், இதுகுறித்து மேலும் முக்கிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

பெரிதாக ஏமாற விரும்பாமலும், ஏஜென்ட் கேட்கும் கொள்ளை காசில் இருந்து தப்பிக்கவும் வரபிரசாதமாக இருப்பது skilled testகள் தான். தமிழ்நாட்டில் இருக்கும் அதிகாரப்பூர்வ இன்ஸ்ட்யூட்களில் குறிப்பிட்ட துறைகளில் சேர்ந்த 45 முதல் 60 நாட்கள் பயிற்சி கொடுக்கப்படும். அதை தொடர்ந்து சிங்கப்பூர் வெளியிடும் கோட்டாவை வைத்து நீங்கள் மெயின் டெஸ்ட் எழுத மேலும் சில நாட்கள் ஆகும். அங்கு முடித்து விட்டு கம்பெனி பார்த்து சிங்கப்பூருக்கு வந்து விடலாம்.

ஆனால், தற்போது பலரும் இப்படி கோட்டாவில் டெஸ்ட் முடித்து விட்டு சிங்கப்பூருக்கு வராமல் சொந்த நாட்டிலேயே இருந்து விடுகின்றனர். இதனால் சிங்கப்பூர் அரசு சிறிது நாட்களாகவே கோட்டா அளவினை தொடர்ந்து குறைத்து வந்தது. ஆனால் அடங்காத இன்ஸ்ட்யூட்கள் தொடர்ந்து அட்மிஷனை போட்டுக்கொண்டே வந்தனர். இதை தொடர்ந்து, இனி இந்த டெஸ்ட்களை சிங்கப்பூரிலேயே நடத்தி முடிக்கலாம் என MOM தரப்பில் முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது.

அப்படி சிங்கப்பூரில் டெஸ்ட் அடித்தால் என்ன ஆகும் எனக் கேட்கிறீர்களா? தற்போதைய சூழலில் இன்ஸ்டியூட்கள் மட்டுமே ஒரு சீட்டுக்கு டெஸ்ட் அடிக்க 2.5 லட்சம் வரை ஊழியர்களிடம் வசூல் செய்கிறது. ஆனால் சிங்கப்பூரில் இந்த டெஸ்ட் நடக்கும் பட்சத்தில் ஒருவரிடம் 80 ஆயிரம் மட்டுமே கட்டணமாக வாங்கப்படுமாம். இது கிட்டத்தட்ட மூன்றில் ஒரு மடங்கு தான் என்பதால் ஊழியர்களுக்கு பெரும் வரபிரசாதமாக இருக்கும்.

அதுமட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் டெஸ்ட் அடிக்கும் போது குறைந்தபட்சம் 45 நாட்கள் தொடங்கி 60 நாட்களுக்கு மேலாகவும் ஆகும். ஆனால் சிங்கப்பூரில் டெஸ்ட் அடித்தால் 4 நாட்களில் மொத்த வேலைகளும் முடிந்து கைகளுக்கு சான்றிதழ் வந்துவிடுமாம். ஆனால் இந்த டெஸ்ட்டை அடிக்க சிங்கப்பூர் செல்ல எந்த விசா கொடுக்கப்படும். எப்படி விசா ஃப்ராசஸ் இருக்கும் என்ற குழப்பங்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து தெளிவான தகவல்கள் ஜனவரியில் சிங்கப்பூர் அரசால் வெளியிடப்படும் அறிவிப்பில் தான் தெரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts