சிங்கப்பூருக்கு வரும் ஒவ்வொருவருக்கு மிகவும் தேவையான ஒரு டாக்குமெண்ட்டாக இருப்பது Sg arrival card தான். medical declaration மற்றும் sg arrival card இரண்டும் ஒன்று தான். இதை எப்படி அப்ளே செய்து வாங்கலாம்.
சிங்கப்பூருக்கு பல விதமான விசாக்களில் வருகிறார்கள். ஒவ்வொரு விசாவிற்கும் டாக்குமெண்ட்டுகள் மாறுப்பட்டாலும், sg arrival card மட்டும் பெரும்பாலும் எல்லா விசாக்களிலுமே கேட்கப்படுகிறது. இது கட்டாயமான டாக்குமெண்டுகள் இல்லை என்றாலும் அனைவர் கைகளிலுமே இருக்க வேண்டியதாக கூறப்படுகிறது.
s-pass, e-pass மற்றும் வொர்க் பெர்மிட்டில் வரும் ஊழியர்களுக்கு கம்பெனியே sg arrival cardஐ எடுத்து கொடுத்து விடுவார்கள். ஆனால் சில கம்பெனிகளில் ஊழியர்களையே எடுத்து கொள்ள சொல்லுவார்கள். ஆனால் அப்படி அவர்கள் சொன்னால் மட்டுமே நீங்களாக எடுக்க வேண்டும். விசா வந்தவுடன் டிக்கெட் போட்ட பிறகு கிளம்ப 3 நாட்கள் இருக்கும் போது தான் sg arrival cardஐ அப்ளே செய்ய வேண்டும்.
tourist visa, student visa மற்றும் dependent visa வைத்திருப்பவர்கள் அவர்களே தான் எடுத்து கொள்ள வேண்டும். sg arrival card என்ற அதிகாரப்பூர்வ ஆப்பை ப்ளேஸ்டோரில் டவுன்லோட் செய்தும் இதற்கு அப்ளே செய்யலாம். இதில் முதற்கட்டமாக பாஸ்போர்ட்டை ஸ்கேன் செய்தோ, நீங்களாகவோ உங்க தனிப்பட்ட தகவலை பதிவு செய்வும். ஆனால் இதிலும் சில குளறுபடிகள் இருக்கிறது.
create record கொடுத்தாலும் ICA வெப்சைட்டுக்கு தான் செல்கிறது. இதனால் ஆப்பில் நீங்கள் பதிவு செய்வதற்கு பதிலாக நேரடியாக ICA வெப்சைட் மூலமாக நீங்களே அப்ளே செய்து கொள்ளலாம். ஆனால் இதற்கு அதிகபட்சமாக 5 முதல் 7 நிமிடத்திற்குள் முடித்து விட வேண்டும். உங்களுடைய பர்சனல் தகவல்கள் மட்டுமே கேட்கப்படும். இமெயிலில் sg arrival card வந்து விடும்.