TamilSaaga

சிங்கப்பூர் வரணும்-னா Bond Paper எவ்வளவு முக்கியம்? இது தெரியாம டிக்கெட் போட்டால் மொத்த பணமும் வீண்… இத படிங்க அப்புறம் போடலாம் டிக்கெட்டு!

சிங்கப்பூரில் வேலைக்கு வரும் ஒவ்வொரு ஊழியருக்கு அவர் வேலை செய்ய இருக்கும் கம்பெனி பாண்ட் போடப்பட வேண்டும். அப்படி போடப்படும் ஊழியர்களுக்கு தான் சிங்கப்பூரினுள் வேலைக்காக நுழைய அனுமதி கிடைக்கும். இது யார் போட வேண்டும்? ஊழியரிடம் ஏன் இருக்க வேண்டும் என்ற முக்கிய தகவல்கள் குறித்து தெரிந்து கொள்ள இதை தொடர்ந்து படித்து விடுங்கள்.

security bond என்பது ஊழியரோ அல்லது கம்பெனி நிர்வாகமோ சட்டம், வொர்க் பெர்மிட் நிபந்தனைகள் அல்லது security bond நிபந்தனைகளை மீறினால், சிங்கப்பூர் அரசாங்கத்திற்குச் செலுத்த வேண்டிய பிணைப்பு உறுதிமொழி தான். இந்த பாண்ட் வங்கியாளர் அல்லது இன்சூரன்ஸ் காப்பீட்டாளரின் மூலம் எடுத்திருக்க வேண்டும்.

சிங்கப்பூர் நிறுவனத்தில் வேலையில் இருக்கும் ஒவ்வொரு மலேசியர் அல்லாத வொர்க் பெர்மிட் ஊழியர்களுக்கும் $5,000 சிங்கப்பூர் டாலருக்கு security bond எடுத்திருக்க வேண்டும். இதற்கு உரிய தொகையை கம்பெனி தான் தர வேண்டும். ஊழியர்களிடம் இருந்து பணம் செலுத்துமாறு கேட்க கூடாது.

சிங்கப்பூருக்கு வேலைக்காக ஊழியர் வரும் போது இந்த பாண்ட்டினை கம்பெனி எடுத்து விட வேண்டும். இன்சூரன்ஸ் காப்பீட்டாளரை பார்த்து MOMக்கு security bond தகவல்களை கம்பெனி நிர்வாகம் அனுப்ப வேண்டும். இதற்கு மூன்று நாட்கள் நேரம் எடுக்கும். ஊழியர்கள் சிங்கப்பூர் வருவதற்குள் அந்த பாண்ட் செயல்பாட்டுக்கு வந்திருக்க வேண்டும்.

மேலும் படிக்க: சிங்கப்பூரில் வேலைக்காக வந்திருக்கும் ஊழியரா நீங்க… குடும்பத்துடன் தங்க ஆசையா? Dependent விசா எடுக்கலாம்… மிஸ்ஸாகும் பட்சத்தில் இதை கூட Follow பண்ணுங்க

WP ஆன்லைனில் லாகின் செய்து பாண்டினை செக் செய்து விட்டு அதன் ஒப்புதல் கடிதத்தை அச்சிட்டு ஊழியருக்கு கம்பெனி நிர்வாகம் விமானம் ஏறுவதற்கு முன்னர் அனுப்பி விட வேண்டும். ஆனால் ஒரு சில ஊழியருக்கு விமான நிலையத்தில் தான் ஏஜென்ட் கொடுப்பதாக கூறப்படுகிறது. இதில் தவறும்பட்சத்தில் ஊழியர் சிங்கப்பூர் வந்திறங்கி விட்டால் அவரை இந்தியாவிற்கு மீண்டும் அனுப்பவும் கம்பெனி செலவு செய்ய வேண்டும்.

வொர்க் பெர்மிட் கேன்சல் செய்யப்படும் பட்சத்திலோ, ஊழியர்கள் சொந்த நாட்டிற்கு திரும்பினாலோ, பாண்ட் கட்டுப்பாடுகளை மீறாமல் இருந்தாலே அந்த பாண்ட்டிற்கான ஊழியர் சிங்கப்பூரினை விட்டு வெளியேறிய ஒரு வாரத்தில் கேன்சல் ஆகிவிடும்.

கம்பெனி சரியாக சம்பளம் கொடுக்காமலோ, ஊழியர் காணாமல் போனாலோ, வொர்க் பெர்மிட் கட்டுப்பாடுகளை மீறும்போது, வொர்க் பெர்மிட் காலாவதி முடிந்து ஊழியர் சிங்கப்பூரினை விட்டு வெளியேறாமல் இருந்தாலோ security bond பறிமுதல் செய்யப்பட்டு விடும். இதற்கு தான் சிங்கப்பூருக்கு வரும் ஒவ்வொரு ஊழியருக்குமே பாண்ட் எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் வரும் ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் புதிய பாஸ்… உங்களுக்கு இந்த Capacity ஒன்னு இருந்தா போதும்.. Lifetime Settlement உறுதி.. Apply செய்வது எப்படி?

ஊழியர்களும் பாண்ட் வரும் தேதியை வைத்து டிக்கெட் போடுங்கள். இதில் அவசரமே பட வேண்டாம். ஏனெனில், சிங்கப்பூருக்குள் செல்ல முடியாமல் திரும்ப நேரிடும். கம்பெனி அனுப்பி விட்டால் கூட நம்முடைய செலவும் மிகப்பெரியதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts