சிங்கப்பூர் அரசு அதிக சம்பளம் வாங்கும் வல்லுநர்களுக்கும், வேறு சில விஷயங்களிலும் திறமையாக இருக்கும் வெளிநாட்டவரின் விசா விதிமுறைகளில் சில மாற்றங்களை செய்து இருக்கிறது. அவர்களுக்காக ONE(Overseas Networks & Expertise) என்ற புதிய விசா கடந்த ஜனவரி 1 முதல் அமலுக்கு வந்தது.
சிங்கப்பூரில் பல வகையான விசாக்கள் நடைமுறைகளில் இருக்கிறது. இந்த லிஸ்ட்டில் வரும் வருடத்தின் முதல் நாளில் ஒரு புது அறிமுகமாக இருப்பது தான் ONE விசா. இது அதிக சம்பளம் வாங்கும் வல்லுநர்களுக்கு மட்டுமல்லாமல் விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம், நிதி, கலை மற்றும் விளையாட்டு துறைகளில் திறமையாக இருப்பவர்களுக்கும் கொடுக்கப்பட இருக்கிறது.
இந்த விசாவிற்கு யார் அப்ளே செய்யலாம்?
- கடந்த ஒரு வருடத்தில் $30000 சிங்கப்பூர் டாலர் அல்லது வெளிநாட்டு பணத்தில் அதற்கு இணையான சம்பளம் வாங்கியவர்கள்.
- வெளிநாட்டில் இருந்து விண்ணப்பிப்பவர்கள், தாங்கள் வெளிநாட்டில் ஒரு ’பிரபல நிறுவனத்தில்’ வேலை செய்வதையோ அல்லது சிங்கப்பூரில் பிரபல கம்பெனியில் வேலை கிடைத்திருப்பதையோ நிரூபிக்க வேண்டும். பிரபல நிறுவனத்தின் வருவாய் 16 மில்லியன் இந்திய ரூபாயினை தாண்டி இருந்திருக்க வேண்டியது குறிப்பிடத்தக்கது.
கலை, கலாச்சாரம், விளையாட்டு, அறிவியல், தொழில்நுட்பம், ஆராய்ச்சி ஆகியவற்றில் சிறந்தும் விளங்குபவர்களுக்கு இந்த சம்பள கட்டுப்பாடு கிடையாது.
one பாஸ் 5 வருடத்திற்கு ஒருமுறை விண்ணப்பிக்க வேண்டும். அதிலும் உங்கள் சம்பளம் $30000 சிங்கப்பூர் டாலராக இருக்க வேண்டியது அவசியம். அல்லது நீங்கள் சிங்கப்பூரில் ஒரு நிறுவனத்தினை தொடக்கி நடத்தி வர வேண்டும். அதில் சிங்கப்பூரர்கள் 5 பேர் வேலை செய்து வர வேண்டும். இந்த கட்டுபாடுகளை நீங்கள் பூர்த்தி செய்யும் பட்சத்தில் புதுபித்தலில் எந்த பிரச்னையும் இருக்காது.
நீங்கள் ஒரே நேரத்தில் பல நிறுவனங்களைத் தொடங்கலாம், இயக்கலாம் மற்றும் வேலை கூட செய்யலாம். நீங்கள் வேறு வேலைக்கு மாறினால் புதிய பாஸுக்கு மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை. dependent visaவில் வரும் உங்கள் மனைவி ஒரு ஒப்புதல் கடிதத்தில் வேலை செய்ய முடியும்.