TamilSaaga

சிங்கப்பூரில் வேலைக்கு செல்ல இருக்கீங்களா? முதலாளி உங்களுக்கு கட்ற லெவி… எதுக்கு? ஏன்? நீங்க நினைச்சாலே அந்த தொகையை பாதியா குறைக்கலாமாம்!

சிங்கப்பூர் வரும் ஊழியர்கள் ஏஜென்ட்டை தொடர்பு கொண்டு கேட்கும் கேள்விகள் சம்பளம் குறித்தும் வேலை குறித்தும் மட்டுமே இருக்கும். ஆனால் அதை விட நீங்கள் கேட்க வேண்டிய முக்கிய கேள்வி levy குறித்து இருக்க வேண்டும். இதை தெரிந்து கொண்டால் நீங்களும் பல ஏமாற்றங்களில் இருந்து தப்பிக்க முடியும். ஏனெனில் சில நிறுவனங்கள் உங்கள் சம்பளத்தில் கூட levy கட்டணத்தினை பிடிக்கும் வாய்ப்பு இருக்கும். அதில் இருந்து தப்பிக்க எவ்வளவு levy கட்டப்படுகிறது என்பதையும் levy என்றால் என்னவென்பதையும் முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.

இதையும் படிங்க: சிங்கப்பூருக்கு skilled test அடிச்சிட்டு வேலைக்கு போற ஐடியாவில் இருக்கீங்களா? தமிழ்நாட்டில் இருக்கும் டாப் 3 Skill test இன்ஸ்ட்டியூட் உங்களுக்காக… பயிற்சியில் கூட பக்கா மாஸ்

சிங்கப்பூர் நிறுவனத்துக்கு வெளிநாட்டில் இருந்து எடுக்கப்படும் ஒவ்வொரு ஊழியர்கள் MOM-மிடம் நிறுவனம் கொடுக்கப்படும் தொகையை levy எனக் கூறப்படுகிறது. இதனால் சிங்கைக்குள் கட்டுப்பாடு இல்லாமல் வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுக்க கூடாது. அதிலும் ஒரு நிறுவனத்தில் சொந்த நாட்டு ஊழியர்கள் எத்தனை பேருக்கு ஈடாக வெளிநாட்டு ஊழியர் எடுக்க வேண்டும் என்பது MOM தளத்தில் இருக்கும். கல்வி தகுதி, வொர்க் பெர்மிட் அல்லது s-passஆ என்பதினை வைத்து கம்பெனி கட்டும் levyல் மாற்றம் இருக்கும்.

Higher skill ஊழியர்களுக்கு levy $300 சிங்கப்பூர் டாலர் தான் வாங்கப்படுகிறது. அதுவே Basic skill அடித்தவர்களுக்கு கம்பெனி மாதத்துக்கு $700 சிங்கப்பூர் டாலர் levy கட்டி வருகிறது. இதில் அடிக்கடி மாற்றம் இருக்கும். levy தொகை குறையும் என்பதால் டெஸ்ட் அடித்து விட்டு வருபவர்களை எடுப்பதற்கே கம்பெனி முன்னுரிமை கொடுக்கும்.

இதையும் படிங்க: வெளிநாட்டில் இருந்து சிங்கப்பூர் வரும் ஊழியர்களே… எப்படி ரூம் தேடுவது எனக் கவலையா? இத படிங்க முத! இதில், எந்த பாஸ் வைத்திருப்பவர்கள் கவலையேப்பட வேண்டாம்?

s-passல் இரண்டு வகையான levy கட்டப்பட்டு வருகிறது. ஒரு நிறுவனத்தின் மொத்த ஊழியர்களில் 15 சதவீதம் s-pass ஊழியர்களை வேலைக்கு எடுக்க முடியும். அப்போது $450 சிங்கப்பூர் டாலர் நிறுவனத்தால் கட்டப்படும். தொடர்ந்து நிறுவன மொத்த ஊழியர்களில் 15 சதவீதத்துக்கும் அதிகமாகவும் 18 சதவீதத்துக்குள் இருந்தால் $650 சிங்கப்பூர் டாலர் கட்டப்பட வேண்டும்.

EPass ஊழியர்களுக்கு லெவி கிடையாது. Basic ஸ்கில் முடித்து சிங்கப்பூர் வந்த ஊழியர்கள் அந்தந்த துறைக்கு ஒதுக்கப்பட்டு இருக்கும் வழிகளில் Higher ஸ்கில் ஊழியராக மாற முடியும். construction ஊழியராக இருக்கும் Basic ஸ்கில் ஊழியர் https://www.mom.gov.sg/passes-and-permits/work-permit-for-foreign-worker/sector-specific-rules/higher-skilled-workers-for-construction-sector இந்த வழிகளில் higher Skill மாற முடியும்.

process செக்டார் ஊழியர்கள் higher Skillக்கு மாற இந்த மூன்று வழிகளை பின்பற்றலாம். manufacturing, marine shipyard அல்லது services செக்டார் ஊழியர்களின் கோர்ஸ் சான்றிதழை வைத்து Higher skill ஊழியராக மாற்ற கம்பெனி தரப்பில் இருந்து விண்ணப்பிக்க வேண்டும்.

Higher skill ஊழியராக லெவி கட்டணத்தினை குறைக்க, வெல்டிங் டெஸ்ட் சான்றிதழை பின்வரும் நிறுவனங்களில் ஏதேனும் ஒன்றால் அங்கீகரித்திருக்க வேண்டும்:

*American Bureau of Shipping
*Bureau Veritas Singapore Pte Ltd
*DNV GL
*Lloyd’s Register of Shipping
*Nippon Kaiji Kyokai
*Singapore Test Services
*Setsco Services
*Common Welder Qualification Scheme conducted by the Singapore Welding Society

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts