சிங்கப்பூர் வரும் ஊழியர்கள் ஏஜென்ட்டை தொடர்பு கொண்டு கேட்கும் கேள்விகள் சம்பளம் குறித்தும் வேலை குறித்தும் மட்டுமே இருக்கும். ஆனால் அதை விட இன்னும் நீங்கள் கேட்க வேண்டியதெல்லாம் இருக்கிறது. அதில் ஒன்று தான் levy. இது தெரிந்து கொண்டால் நீங்களும் பல ஏமாற்றங்களில் இருந்து தப்பிக்கலாம். ஏனெனில் சில நிறுவனங்கள் உங்கள் சம்பளத்தில் levy பிடிக்கலாம். இல்லை நீங்கள் பிடிக்காமல் வேலையில் இருந்து விலகும் போது உங்களுக்கு நான் இவ்வளவு levy கட்டி இருக்கிறேன். அதை கொடுங்கள் எனக் கேட்கவும் வாய்ப்பு உள்ளது. அந்த சமயத்தில் இது உங்களுக்கு உதவியாக இருக்கும்.
சிங்கப்பூர் நிறுவனத்துக்கு வெளிநாட்டில் இருந்து எடுக்கப்படும் ஒவ்வொரு ஊழியர்கள் MOM-மிடம் அந்தந்த நிறுவனம் கொடுக்கப்படும் தொகையை தான் levy என்கிறார்கள். இதனால் கட்டுப்பாடு இல்லாமல் வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுக்க முடியாது. அதிலும் ஒரு நிறுவனத்தில் சொந்த நாட்டு ஊழியர்கள் எத்தனை பேர் இருந்தால் வெளிநாட்டு ஊழியர் எவ்வளவு எடுக்க முடியும் என்ற கணக்கிடும் MOM தளத்தில் இருக்கும். உங்க கல்வி தகுதி, வொர்க் பெர்மிட் அல்லது s-passஆ என்பதினை வைத்து கம்பெனி உங்களுக்கு கட்டும் levyல் மாற்றம் இருக்கும்.
சிங்கப்பூர் நாட்டு ஊழியர் ஒருவரை வைத்து இருந்தால் ஒரு கம்பெனி 7 வெளிநாட்டு ஊழியரை வொர்க் பெர்மிட்டில் வேலைக்கு எடுக்கலாம். இதில் Higher skill டெஸ்ட் அடித்து வந்தால் levy $300 சிங்கப்பூர் டாலர் தான் வாங்கப்படுகிறது. Basic skill அடித்தவர்களுக்கு கம்பெனி மாதத்துக்கு $700 சிங்கப்பூர் டாலர் levy கட்டி வருகிறது. இதில் அடிக்கடி மாற்றம் ஏற்படும். levy குறையும் என்பதால் டெஸ்ட் அடித்து விட்டு வருபவர்களை எடுப்பதற்கே கம்பெனி முன்னுரிமை கொடுக்கும்.
s-passல் இரண்டு வகையான levy கட்டப்படுகிறது. ஒரு நிறுவனத்தின் மொத்த ஊழியர்களில் 10 சதவீத s-pass ஊழியர்களை வேலைக்கு எடுக்கலாம். அப்போது $450 சிங்கப்பூர் டாலர் நிறுவனத்தால் கட்டப்படும். அடுத்து, நிறுவன மொத்த ஊழியர்களில் 10 சதவீதத்துக்கும் அதிகமாகவும் 18 சதவீதத்துக்குள் இருந்தால் $650 சிங்கப்பூர் டாலர் கட்டப்பட வேண்டும்.