TamilSaaga

வீட்டிலிருந்து கல்விகற்கும் சூழலும், அதில் உள்ள கஷ்டங்களும் – விளக்கமளித்த அமைச்சர் சான் சுங் சிங்

சிங்கப்பூரில் தற்போது நிலவும் இக்கட்டான சூழல் காரணமாக மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்லாமல் முழுமையாக வீட்டு அடிப்படையிலான கற்றலுக்கு மாறுவதில் ஆர்வமுள்ள சில பெற்றோர்களிடமிருந்தும் அதே சமயம் இதற்கு எதிராக இருக்கும் சில பெற்றோர்களிடமிருந்தும் நான் கருத்துக்களைப் பெற்றுள்ளேன். இத்தகைய கலவையான கருத்துக்களை புரிந்துகொள்ளமுடிகின்றது என்று சிங்கப்பூரின் கல்வி அமைச்சர் சான் சுன் சிங் தந்தது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

நீண்ட கால அடிப்படையில் முழுமையாக வீட்டில் இருந்து கல்விகற்கும் பட்சத்தில் மாணவர்களின் கற்றல்,சமூக-உணர்ச்சி மற்றும் மன நல்வாழ்வுக்கு கணிசமான அளவில் செலவாகிறது. கூடுதலாக, அவர்கள் அனைவருக்கும் HBLக்கு உகந்த வீட்டுச் சூழல்கள் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். குழந்தைகளை பராமரிக்க மாற்று ஏற்பாடுகளைச் செய்ய பல பெற்றோர்கள் போராட வேண்டியதாக உள்ளது. இது அவர்களின் குழந்தைகளுக்கு சிறந்ததாக இருக்காது.

மேலும் இந்த சூழலில் ஆசிரியர்கள் தங்கள் குடும்பங்களைப் பராமரிக்கும் அதே நேரத்தில் ஆன்லைன் பாடங்களைத் தயாரித்து நடத்துவதற்கான கூடுதல் நேரத்தை செலவிடுகின்றனர். கடந்த 3 மாதங்களில், 129 மாணவர்கள் மற்றும் 17 பள்ளி ஊழியர்கள் பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மொத்த மாணவர் மக்கள்தொகையில் 0.03% ஐ குறிக்கிறது.

ஆரம்பநிலை முதல் பல்கலைக்கழகத்திற்கு முந்தைய நிலைகள் வரை பெருந்தொற்றின் அபாயங்களை நிர்வகிப்பதற்கும், தொடர்ந்து கற்றலை இயக்குவதற்கும், எங்கள் பள்ளிகளுடன் நெருக்கமாக பணியாற்றியதற்காக பெற்றோருக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். எங்கள் கூட்டு முயற்சிகளால், எங்கள் பள்ளிகளின் சராசரி வருகை விகிதம், பெருந்தொற்றுக்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடத்தக்கதாக உள்ளது என்றார் அமைச்சர்.

Related posts